பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323

323

இறைவனே அடைந்தவர் இன்பம் பெறுவர் 363. சார்ந்தவர்க்கின்பம் கொடுக்கும் தழல்வண்ணன் பேர்க்தவர்க் கின்ளுப் பிறவி கொடுத்திடும் கூர்ந்தவர்க் கங்கே குரைகழல் காட்டிடும் சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.

(இ - ள்) நெருப்பு நிற வண்ணனை இறைவன் தன்னை அடைந்தவர்கட்கு இன்பம் தருவன். தன்னை அடையாது விலகி நிற்பவர்கட்குத் துன்பம் தரும் பிறவியைக் கொடுப்பன். இறைவனை அடைய வேண்டும் என்னும் கூரிய ஞானம் படைத்தவர்கட்கு இறைவன் தனது ஒசை மிக்க திருவடி ஞானத்தைக் காட்டியருள்வான். அங்ஙனம் கூர்ந்த மதியுடையவர் இறைவனேயடைந்து அவ்வித இன்பத்தை நன்கு அனுபவிப்பர்.

(அ- சொ) தழல் வண்ணன் - நெருப்புப் போலும் நிற முடைய இறைவன். பேர்ந்தவர் - நீங்கினவர்கள். இன்ன - துன்பம் தரும். கூர்ந்தவர் நுட்பமான ஞானம் பெற்ற வர்கள். சூரை - ஒலிக்கும். கழல் - வீரத்தண்டை அணிந்த பாதம். தேவர் - இறைவர். --

(விளக்கம்) திருவடி ஞானம் பெறுதற்குக் கூரிய ஞானம் இருத்தல் வேண்டும். இறைவன் உலகம் உய்யத் திருநடம் புரிபவன். அதனுல் அவன் திருவடிகளில் சிலம்பு உண்டு;

அஃது ஒலிக்கும் தன்மையது: ஆகவே அதனைக் குரைகழல் என்றனர்.

குரு வழிபாடே சிறந்த வழிபாடு 304. இறைவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர் அவனை வழிபட்டங் காமாருென் றில்லை அவனை வழிபட்டங் காமாறு காட்டும் குருவை வழிபடின் கூடலும் ஆமே.