பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

3%.8

அகங்காரம் ஒழிய வழி

310. வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச் செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை அல்லும் பகலும் அருளுடன் துங்கினல் கல்லும் பிளந்து கடுவெளி ஆமே. (இ) - ள்) உங்களால் எதையும் சாதிக்கும் நிலையிலும் கோபத்தை விட்டு ஒழியுங்கள். எந்த அளவுக்கு மனத்தை நல்வழியில் செலுத்த முடியுமோ அந்த அளவுக்கு மனத்தைச் செலுத்துங்கள். இரவும், பகலும் கருணையான நினைவுடன் யோகநிலையில் இருந்து வந்தால், ஆணவமாகிய கல்லும் விலகி இறைவடிவான பரவெளி தென்படும்.

(அ - சொ) வெகுளி - கோபம். அல் - இரவு. தூங்கினல் - யோக நிலையில் இருந்தால். கல் - ஆணவம். வெளி . பரவெளி.

(விளக்கம்) கோபம் பிறரைக் கெடுப்பதோடு இன்றித் தன்னையும் கெடுத்தலின் அதனை விடுதல் வேண்டும். மனம் பலவழியில் சிதறுண்டு போகும்; அதனை நல்வழியில் நிறுத்துதல் இன்றியமையாதது. அருள் என்றும் மாரு திருத்தல் வேண்டும் என்பார், அல்லும் பகலும் அருளுடன் துரங்கிளுல் என்றனர். ஆணவம், தடிப்பும் வன்மையும் பெற்றது. ஆதலின், அதனைக் கல் எனக் குறிப்பிட்டனர்.

தன்னை அறிவதே பேரறிவாகும் 311. முன்னைப் பிறவியில் செய்த முதுதவம்

பின்னப் பிறவியில் பெற்ருல் அறியலாம் தன்னை அறிவ தறிவாம் அஃதன்றிப் பின்னை அறிவது பேய்அறி வாகுமே. - (இ - ள்) நாம் முற்பிறப்பில் செய்த பெருந்தவத்தின் பயனை அடுத்த பிறவியைப் பெற்று அனுபவிக்கின்றதைக் கொண்டு இன்ப துன்பங்களே அறிந்து கொள்ளலாம்.