பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

329

அறிவாகும். * * : *- : ... --

{அ சொ) முதுதவம் பெருந்த்வம். (விளக்கம்) நம் இப்பிறவியில் நன்மையையோ . யோ அனுபவிக்கின்ருேம் என்றல், அவற்றிற்குக் கர்ண்ம் முன்பிறவியில் செய்த புண்ணிய பாவமே ஆகும். அக்குறிப்பே இம்மந்திரத்தில் விளக்கப்பட்டுள்ளது. பின்னே என்பது தன்னை அல்லாத பிறவற்றை ஆகும். -

தன்னை அறிந்தவன் கேடு அடையான் 312. தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்ருன் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந் தானே. (இ - ள்) எவன் ஒருவன் தன்னை அறிகின்ருனே, அவ னுக்கு அழிவு இல்லை. இவ்வாறு தன்னை அறியாத கார ணத்தால்தான் அவன் அழிகின்ருன். தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னைப் பிறர் பூசிக்கும் பேறு பெங்றுத் திகழ்பவன் ஆவான்.

(அ - செர்) அர்ச்சிக்க - பூசிக்க. (விளக்கம்) தன்னை அறிதலாவது, தான் யார்? தான் வந்த விதம் என்ன? என்று ஆராய்தல் இங்ங்ணம் ஆராய ஆராயப் பிரம்மஞானம் உணர நேரிடும். பிரம்மஞானத்தை உணர்ந்தவன், பிரம்மஞானி. அவன் பிறரால் போற்றப் படுதல் உண்மை.

சீவன் அறிவு வடிவாகும் 313. அறிவு வடிவென் றறியாத என்னை

அறிவு வடிவென் றருள்செய்தான் கந்தி அறிவு வடிவென் றருனால் அறிக்தே அறிவு வடிவென் அறிந்திருந்தேனே,