பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

331

அறிவு ார் நெஞ்சம் ஆண்டவன் இருப்பிடம் 315. அறிவுடையார்:ெ -

சகல்இடம் ஆவ.

தறிவுடையார்கெஞ் சருந்தவம் ஆவ.

தறிவுடை யார்நெஞ்சொ டாதிப் பிரானும்

அறிவுடை யார்நெஞ்சத் தங்குகின் ருனே.

(இ - ள்) அறிவுடையவர்களின் மனமே அகன்ற இடமுடைய மனம். அருந்தவம் அமைந்த இடம். அவ்விடம்தான் ஆதியாகிய பரமன் அமர்ந்திருக்கும் இடம். - * -- - - - - - - -

(அ சொ) ஆதி . முதன்மை. -

(விளக்கம்) அறிவுதான் இறைவன். ஆகவே, அவ்விடம் தவத்தானமாகவும், இ ைற வ னு க்கு இருப்பிடமாகவும் இருப்பது.

சித்தாந்தமும் வேதாந்தமும் சிவனைக் காட்டும் 316. சித்தாந்தத் தேசீவன் முத்திசிக் தித்தலால் சிந்தாந்தத் தேகிற்போர் முத்திசித் தித்தவர் சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால் சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே. (இ - ள்) சைவ சித்தாந்த சமயத்தில் பசுத்தன்மை நீங்கிப் பரத்துவம் உணரும் வாய்ப்பு இருத்தலால், முத்தி இன்பத்தை அடைய நினைப்பவர்கள் சித்தாந்த நெறியைக் கடைப்பிடிப்பர். சித்தாந்தத்துடன் இணைந்த வேதாந்த மும் உண்மைப் பொருளை உணர்த்தலின் அந்தச் சித்தாந்த வேதாந்தம் இறைவனைக் காட்டும்.

(அ- சொ) சீவன் முத்தி - பாசம் நீங்கி விளங்கும் நிலை. முத்தி - மோட்சம். சிந்தித்தவர் - நினைப்பவர்.

(விளக்கம்) முத்தி எய்த சித்தாந்த நெறி சிறந்தது. இதனால் வேதாந்த நெறி சிறப்பற்றது என்பதன்று, அதுவும் செம்பொருளைக் காட்ட வல்லது.