பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

333

蕊

கோயில் அமைப்பு பதிதான் அருட்சிவ் லிங்க்மாம் ஆய பசுவும் அடல் ஏறென நிற்கும் ஆய பலிபீடம் ஆகும்ற்ே.பாசமாம் ஆய அரன்கில ஆய்ந்துகொள் வார்க்கே. (இ - ள்) அருளே திருமேனியாகக் கொண்ட சிவ லிங்கம்தான் ஆதியாய பதியாகும். வீரமுடைய எ! தாகச் சிவலிங்கத்தின் முன்னே அச் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருப்பது அநாதியாகிய சீவான்மா ஆகும். அந்த ஏற்றிற்குப் பின்னல் அமைத்திருக்கும் பலிபீடம் பாசபந்தமாகும். இவைதாம் இறைவன் கோயில் அமைப்பு என்பதை ஆராய்ச்சி அறிவுடையவர்கள் அறிந்து கொள்வார்கள். - :

(அ - சொ) ஆய அநாதியே ஆகிய பதி - கடவுள். பசு - ஆன்மா. அடல் - வீரம். ஏறு - மாடு. பாசம் - ஆணவம், கன்மம், மாயை ஆகிய பாசபந்தங்கள். அரன் - இறைவ னுடைய. நிலை - கோயில்.

(விளக்கம்) கோயிலுக்கு நாம் செல்லுகிருேம். மூலட் உானத்தில் சிவலிங்கம் இருப்பதைக் காண்கிருேம். அந்தச் சிவலிங்கத்திற்கு எதிரே மாடு ஒன்று சிவலிங்கத்தை நோக்கிய வண்ணம் படுத்துக்கொண்டிருப்பதை அறிகிருேம். அதற்குப் பின் வட்டமான கல் வடிவத்தையும் பார்க்கின்ருேம். இம் மூன்றும் இவ்வாறு அமைந்திருப்பதன் கருத்து பதி, பசு, பாச விளக்கத்தை உணர்த்துவதாகும். ஆகவே, கோயில் அமைப்பே முப்பொருள் உண்மையை அறிவிப்பதாகும். மேலும், சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு முன்பு ஒரு நந்தியும், அந்த நந்திக்குப் பின் சிறிது தூரத்தில் ஒரு நந்தியும் இருப்பதைக் காண்கின்ருேம். பின்னுள்ள நந்தியின் பின் பக்கத்தில் தான் பலிபீடம் அமைந்திருக்கும். இவ்வாறு அமைந்திருப்பதன் கருத்து, பசுவாகிய ஆன்மா பாசத்தோடு இருக்கின்ற வரையில் பாசம் இணைந்தே இருக்கும் என்பதும்,