பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

337

337

(இ - ள்) எல்லாவற்றையும் அறிகின்ற அறிவை வெளியில் ஆராய விடுத்து, எல்லாவற்றையும் உணர்ந்தும் பயன் இல்லை. எல்லாவற்றையும் அறியும் அறிவு நான் தான் என்ற உணர்ச்சி பெறுவோமானல் அந்த அறிவே இறை அறிவாகும்.

(அ - சொ) விட்டு - ஆகாய வெளியே செலுத்தி. இலாபம் - பயன். நான் என்னில் - நாளுகிய பிரம்மம் என்ருல். (விளக்கம்) அறிவால் எதனையும் அறியலாம்; அந்த அறிவு எஃது என்பதை உணர்தல் நன்று; அந்த அறிவுதான் பிரம்ம ஞானம் எனப்படும். அதையே ஈண்டு, எல்லாம் அறிந்த அறிவினை நான் என்னில்’ என்றனர்.

ஈசன் இருப்பிடத்தை அறிய வழி

324. வாசியும் மூசியும் பேசி வகையில்ை

பேசி இருந்து பிதற்றிப் பயன்இல்லை

ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்

ஈசன் இருந்த இடம்எளி தாகுமே. .

(இ - ள்) பிராணவாயு, சுழு மு ன என்றெல்லாம் வாயில்ை பேசிப் பயனில்லை. இப் பேச்சின் மூலம் இறை வன் இருப்பிடத்தைக் காண முடியாது. ஆசை, அன்பு இவற்றை ஒழிக்க வேண்டும். அப்படி இவற்றை நீக்கினல், இறைவன் இருக்கும் இடத்தை எளிதாக உணரலாம்.

(அ - சொ) வாசி - பிராணவாயு. மூசி - சுழி முனை.

(விளக்கம்) பிராண வாயுவை அடக்கி ஒடுக்கப் பழகிளுல் இறைவனே அடையலாம் என்று வேதாந்தம் பேசிக்கொண்டு உலகப் பற்றில் ஈடுபட்டு இருந்தால், இறைவனை அடைய முடியாது. ஆகவே ஆசை, அன்பு இவற்றை ஒழிக்க வேண்டும் என்று இம்மந்திரம் கூறுகிறது. ஆசை என்பது உலக இன்பங் களில் கொள்ளும் பற்று: அன்பு என்பது மனைவி மக்களிடத்தில் காட்டும் பற்று. --

22 متسسه تي