பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

338

ஆசையை ஒழித்தால் ஆனந்தம் உண்டாகும் 325. ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்

ஈசனே டாயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்தம் ஆகுமே. (இ - ள்) ஆசையை அடியோடு விட்டு ஒழியுங்கள். அவ்வாசை, இறைவனிடத்துக் கொண்ட ஆசையே ஆயினும் விட்டொழியுங்கள். ஆசை ஏற்பட ஏற்படத் துன்பங்கள்தாம் வந்து சேரும். ஆசையை ஒழித்தால் இன்பம் மேல் ஒங்கும். . - (அ - சொ) அறுமின்கள் - நீக்குங்கள். ஆய் - உண்டாகி. (விளக்கம்) ஆசை இருந்தால் துன்பமும், ஆசை அழிந்தால் இன்பமும் ஏற்படும். எப்பொருளிடத்தும் ஆசையை விட்டொழிப்பதை வற்புறுத்தவே ஈசனேடாயினும் ஆசை வேண்டா என்றனர். ஈசனேடு ஏன் ஆசை கொள் கின்ருேம்? நாம் ஒன்றைப் பெற அவனிடம் ஆசை கொள் கின்ருேம். நமக்கு வேண்டியதை நாம் இறைவனிடம் கேட்க வேண்டியதில்லை. நமது உள்ளக் குறிப்பை அறிந்து அவனே கொடுப்பான். ஆகவே அவனிடம் ஆசை வைக்க வேண்டும் என்ற நியதி இல்லை. வேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ என்பது அனுவே ஞானிகள் வாக்கு. -

இறைவன் விளங்கும் நிலை 326. காலினில் ஊறும் கரும்பினில் கட்டியும்

பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும் பூவினுள் நாற்றமும் போல் உளன். எம்இறை காவலன் எங்கும் கலந்துகின் ருன்அன்றே. (இ - ள்) காற்றில் உணர்ச்சியாகவும், க ரு ம் பி ல் வெல்லக் கட்டியாகவும், பாலில் நெய்யாகவும், பழத்துள்