பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340

340

செய்த அளவில் நீங்கிப்போகும். இறைவன் மலம் அற்றவன்:

ஆன்மாவும் மலம் அற்றபோது இறைவனைப் போன்றுதானே.

ஆகும்! -

ஓங்காரத்தின் மாண்பு

328 ஓங்காரத் துள்ளே உதித்தஐம்பூதங்கள்

ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம் ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றன ஓங்காரசீவ பர்சிவ ரூப்மே. (இ - ள்) ஐந்து பருப்பொருள்களும் அவ் ஓங்காரத்தி லிருந்துதான் வெளிவருகின்றன. அசையும் பொருள்களும் அவ் ஓங்காரத்திலிருந்துதான் வெளிவந்தன. அவ் ஓங்கார தீதத்தில் மூன்று உயிர்களும் பொருந்தி உள்ளன. அந்த ஓங்காரமே, சீவரூபம், பரசிவரூபமாகவும் விளங்குவது.

(அ - சொர் ஓங்காரம் - ஓம் என்னும் பிரணவ எழுத்து. பூதங்கள் - பருப் பொருள்கள். ஐம்பூதங்கள் - மண், நீர், தீ, காற்று, ஆகாயம். சரம் - அசையும் பொருள்கள். அசரம் - அசையாப் பொருள்கள். ஓங்காரதீதம் - மகாகாரணப் பிரணவம். உயிர்மூன்று - விஞ்ஞான கலர், பிரளயாகலர், சகலர் என்னும் மூன்று உயிர்கள். சீவருபம் - ஆருயிர். பரசிவருபம் - அருள்வடிவம்; அருளுடைய இறைவன் வடிவம். (விளக்கம்) ஓங்காரம் என்பது ஒர் எழுத்து மந்திரம்; இது தூய தமிழ்ச்சொல்: ஒம் என்னும் மொழி ஈர் எழுத்துக் களால் ஆனது அன்று; ஒர் எழுத்து மொழியே ஆகும். ஒம் என்னும் சொல் ஒம்புதல் என்பதன் முதல்நிலைத் தொழிற் பெயர். இதன் பொருள் காத்தல் என்பது; ஓம் என்பது, காரம் என்னும் சாரியை பெற்றுள்ளது; ஆகாரம், ஊகாரம் என்பன போல் என்க. சரம் அசரம் என்பன சேர்ந்து சராசரம் என்று ஆயின. விஞ்ஞான கலர் உயிர் ஆவது ஆணவமலம் மட்டும் இயைந்தது. பிரளயாகலர் என்னும் ஆன்மா ஆணவம், கன்மம் என்னும் இருமலங்களையுடையது. அகலங்.என்பது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்