பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

怒爱罗

(விளக்கம்) சிவ என்னும் மந்திரம் இறைவனையும் இறைவியையும் குறிக்கும். சி. இறைவன், வ, இறைவி. ஆகவே இம் மகா மந்திரத்தை ஒத அம்மை அப்பனை நினைத்தி தாகும். அவர்கள் அருளேயும் பெறலாம்.

உலகுக்கு ஒரே தெய்வம் 331. ஒன்றுகண் டீர்உ ைகுக்கொரு தெய்வமும்

ஒன்றுகண் டீர்உல குக்குயிர் ஆவதும் நன்றுகண் டிர்இனிநமச்சி வாயப்பழம் தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே. (இ - ள்) உலகுக்கெல்லாம் ஒப்பற்ற ஒரு தெய்வத் தைத் தேடிக் கண்டு கொள்ளுங்கள். அதுவே உலகுக்கு உயிராய் இருப்பது என்பதையும் தெரிந்து கொள்ளுங் கள். அது மிக நல்ல .ெ பா. ரு ள் என்பதையும் க ண் டு கொள்ளுங்கள். அப்பொருள்தான் ந ம ச் சி வா ய க் கணியாகிய இனிய பொருள். அதனை நன்கு தின்று கண்ட போது இனித்தது.

(அ - சொ) தித்தித்த ஆறு - இனித்த விதம். (விளக்கம்) தெய்வம் பல இல்லை; ஒன்றே ஆகும். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்பது உண்மைக் கருத்து. அவ். ஒரு தெய்வம் எல்லா உடலிலும் உயிருக்குயிராய் இருப்பது. அவ்வுயிர் நமச்சிவாய உயிர்; அஃது ஈண்டுக் கனியாக உருவகப் படுத்தப்பட்டது. நமச்சிவாய மந்திரம் இறைவன் வடிவாகவும் மக்கள் வடிவாகவும் இருப்பது. ஆகவே அதனை உலகுக்குயிர் என்றனர். தின்று கண்டீர் என்றது நமச்சிவாய மந்திரத்தை சதா உச்சரித்துக் கொண்டிருங்கள் என்பது.

ஞானிகளின் மன உறுதி 332. மன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன் சிவன்வரின் நான்உடன் போவது திண்ணம் பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன் தவம்வரும் சிந்தைக்குத் தான்எதிர் ஆரே.