பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343

343

(இ- ள்) இயமன் என்ன அழைத்துச் செல்லவரின் ஞானவாளை அவன் மீது வீசுவன். சிவன்வரின் அவன் பின் போவது உறுதி. பிறவிக்குக் காரணமான வினைகளை முன்பே போக்கியுள்ளேன். ஆகையில்ை தவம் கைவரப் பெற்ற மனமுடையவர்கட்சூ யார் எதிர்? எவரும் இலர்.

(அ - சொ) நமன் - இயமன். எறிவன் -೧ಳಿಕಖಣಿ. பவம் - பிறப்பு. பண்டே - முன்னே.

(விளக்கம்) ஞானவாள் என்பது ஐந்தெழுத்து மந்திர மாகிய சிவாயநம எனும் மந்திரம்.

உருவ வழிபாட்டின் உயர்வு

333. திருமேனி தானே திருவருள் ஆகும் திருமேனி தானே திருஞானம் ஆகும் திருமேனி தானே சிவநேயம் ஆகும் திருமேனி தானே தெளிந்தார்க்குச்சித்தே.

(இ - ள்) இறைவனது திருவுருவம் அவனது திருவருள் ஆகும்; திருமெய்ஞ்ஞானமும் ஆகும். சிவமாகிய அவனி டம் அன்பிை உண்டாக்குவதாகும். இந்த உண்மைகளைத் தெரிந்தவர்களுக்குப் பல சித்துக்களும் உண்டாகும்.

(அ - சொ) திரு - அழகிய முத்தித்திரு. நேயம் - அன்பு. சித்து - எல்லாம் செய்ய வல்ல வல்லமை.

(விளக்கம்) சைவசமயம் ஒன்றே இறைவனது நிலையை உருவம், அருவம், அருஉருவம் என்று கூறவல்லது. அவற்றுள் உருவத் திருமேனியின் சிறப்பு இம்மந்திரத்தில் கூறப் பட்டுள்ளது. இறைவனுக்கு உருவம் இல்லை என்பார்க்கு அறிவு கொளுத்தும் முறையில் இம்மந்திரம் அமைந்துள்ளது.