பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

岛壶壶

நடன தரிசனம் ஆனந்தம் உண்டாக்கும் 334. புளிக்கண் டவர்க்குப் புனல்ஊறு மாபோல்

களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம் துளிக்கும் அருட்கண்ணீர் சோர்ருெஞ் சுருக்கும் ஒளிக்குள் ஆனந்தத் தமுதுாறும் உள்ளத்தே. (இ- ள்) புளியைப் பார்த்தவர்க்கு வாயில் நீர் சுரக்கும். அதுபோல நடராசப் பெருமானது திருநடனத் தைக்கண்ட அளவில் ஆ ன ந் த ம் தோன்றும். அரு ள் கண்ணிர் துளிக்கும். மனம் உருகும். மனத்துள் அமுதம் ஊற்றெடுக்கும்.

(அ - சொ) புனல் நீர், (விளக்கம்) நடராசப் பெருமானது நடனம், அருள் நடனம், ஆனந்த நடனம். அதைக் கண்டதும் மனம் உருகும்; ஆனந்தக் கண்ணிர் பெருகும். - - .

நடராசர் வடிவம் நமசிவாய மந்திரமே

335. திருந்துகல் சீனன் றுதரிய கையும் -

அருந்தவர் வாஎன் றணத்த மலர்க்கையும் பொருந்தில் இமைப்பிலி யவ்என்ற பொற்கையும் திருந்தத்தீ ஆகும் திருநிலை மவ்வே. (இ - ள்) திரிந்திய நல்ல சீ என்னும் எழுத்தைக் குறிப்பது உதறிய கையாகும். அரிய தவத்தரை வா என்று அழைப்பது அணைத்த மலர் போன்ற கை ஆகும். பொருந்தும் முறையில் இமையாத கண்ணுடைய இறை வனது அழகிய கைய ஆகும். தீ ஏந்திய கை திரு ஆகும். நிலையாக ஊன்றிய திருவடி ம ஆகும்.

(அ - சொ) இமைப்பிலி - இமை கொட்டாத கண்கள்ை யுடைய நடராசப்பெருமான். பொன் - அழகிய.