பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

351

351

இடக்கையைப் பிடித்துப் பார்க்க வேண்டும். நாடி பார்ப் புதற்கு முன்பு விரலில் நெட்டை ஒடித்துவிட்டுப் பார்க்க வேண்டும். மூன்று விரல்களில் பவுத்திர விரலால் அறியப் படுவது சிலேத்தும நாடியாகும், அதாவது கப நாடி.

நாடியின்மூலம் நோய் இல்லாமை அறிதல்

343. வழங்கிய வாதம் மாத்திரை ஒன்ருகில்

தழங்கிய பித்தம் தன்னில் அரைவாசி அழுங்கும் கபம்தான் அடங்கியே கால் ஒடில் புழுங்கிய சீவர்க்குப் பிசகொன்றும் இல்லையே.

(இ. ள்) ஒரு முறை கண் இமைக்கிற நேர அளவுக்கு வாதம் நடக்குமானல், கண் இமைப்பு நேரத்தில் பாதி ஆளவுக்குப்பித்த நாடி நடக்குமானல், கண் இமைக்கிற நேரத்தில் கால் பங்கு கப நாடி நடக்குமானல், உயிர்க்கு ஆபத்து இல்லே. - -

fత్తి - சொ) மாத்திரை - கண் @ಣಊಹಡ್ರ நேரம். தழங்கிய - விளங்கிய அழங்கும் ஒலிக்கும். கபம் . சளி புழுங்கிய - வெம்பிய. 效

(விளக்கம்) மூன்று விரல்களை மணிக்கட்டில் வைத்துப் பார்க்கும்போது, அந்த நாடிகளின் துடிப்பின் வேகம் இந்திந்த அளவுக்கு இருக்க வேண்டுமென இம்மந்திரம் குறிப்பிடுகிறது. கபம் மிக்கபோது கிர் கிர் என்ற ஓசை வருதலின் அழுங்கும் என்றனர்.

நாடிகளின் கடை

344. இல்லையே வாதம் எழில்நடைக் கோழியாம்

எல்லையே பித்தம் எழும்பும் தவளைபோல் ஒல்லையே ஐயம் ஊர்ந்திடும் பாம்புபோல் அல்ல யேகண் டறிந்தவர் சித்தரே.