பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356

356

(இ - ள்) பிங்க்லே ஒருநாள் முழுதும் இயங்குமானல்

மூன்று ஆண்டுகளில் மரணம் வரும் என்பது உறுதி. இடகலை பிங்கல ஆகிய இருகலைகளும், இரு நாசிகளின் துவாரங்களில் ஒன்ருச் சேர்ந்து பத்து நாட்கள் இடை விடாது நடந்தால், ஆறு மாதத்தில் இறப்பு ஏற்படும். இவையே இறப்புக்குரிய குறிகளே அறியும் விதமாம். . (அ- சொ) இயங்கிடில் நடக்குமானுல். உபயத்தில்

இரண்டும் ஒன்று சேர்ந்து மதி - மாதம். மண் - பூமி. மரிப்பான் - இறப்பான். ஒண்ணிய ஒழுங்கான.

.. விளக்கம்) ஒரே பக்கம் சுவாசம் ஒடுதலும், இரண்டு பக்கமும் ஒரே சமயம் ஒடுதலும் உண்டு என்பது இம்மந்திரத்' தின் மூலம் அறிகிருேம். -

சுவாசம் வாய்வழியே வரின் மரணக் குறியாம்

35. குறிகேளு மூக்கன்றிக் குலவில்ாய் வழி ஒடில்

மறிகேளும் மூன்ரும்நாள் மரித்திடுவன் தப்பளது. தெரிகேளும் மும்மலமும் திரண்டுமிகக் குறைந்துவரில் பரிவாகும் பட்சத்தில் பார்உயிர்தான் தப்பாதே. (இ- ள்) இன்னமும் சாகும் குறி இன்னதெனக் கேட் பாயாக சுவாசம் மூக்கு வழியே ஓடாது வாய்வழியே ஒடினல், மூன்ரும் நாளில் தவருது இறப்பன். மலம், மூத்திரம், விந்து குறைந்து வரின் துன்பம்தான். பதின்ந்து நாட்களில் போதல் தவருது.

(அ - சொ) குலவி - விளங்கி. மும்மலம்- மூன்று மலங்கள். (அவை: மலம், சிறுநீர், இந்திரியம்) பரிவு - துன்பம். பட்சம் . பதினைந்து நாட்கள். -

(விளக்கம்) நாசிவழியே சுவாசம் வருதல் முறை. இம்முறை மாறி வாய்வழி வருதல் தவறு. மீண்டும் கேட்க என்பார் மறிகேளும் என்றனர். இத்துடன் இன்றி இன்னமும் தெரிந்து கேட்க என்பார் தெரிகேளும் என்றனர்,