பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358

358

(அ - சொ) பா - வெல்லப் பாகு. ஆ , வியப்புக்குறி.

(விளக்கம்) நாடி அறிதலில் நன்கு கைதேர்ந்து பழகிய பழக்கத்தைக் கொண்டுதான் வாதநாடி மேல் நோக்கி நடக் கிறது என்பதையும் பாகுபோலக் கரைந்து கீழ் நோக்கி நடக்கிறது என்பதையும் உணர முடியும். நாடிக்குச் சீவக் கலை சிறப்புத் தருதலின் சீவக் கலையால் சிறந்திடும் என்றனர். அ என்ற சுட்டு ஆ என நீண்டது.

நாடிகளை அறிந்து நடத்தல்

354. பித்தம் அடங்கிளுல் பேசாதே போய்விடு

- எத்திய ஐயம் எழும்பிடில் கிட்டாதே

பொத்திய வாதம் பொருமின் மருந்துசெய் எத்தி இம் மூன்றின் இயல்பை அறிந்திடே.

(இ) - ள்) பித்தம் அடங்கி விட்டால் வைத்தியம் ஒன்றும் செய்யாதே போய்விடு. வாதம், பித்தம் குறைந்து கபம் மேலிட்டால் நோயாளியை அணுகாதே. குறைந்த, வாதம் மீண்டும் எழும்பினுல் மருந்து கொடு. இவ்வாறு இந்த வாத பித்த சிலேத்தும நாடிகளை அறிந்து நட.

(அ - சொ) எத்திய - வஞ்சமாம். ஐயம் - கபம், சிலேத்துமம். பொருமின் - எழும்பினால் பொத்திய குறைந்த எத்தி - உனது யூகையினல்.

(விளக்கம்) போய்விடு என்பதன் கருத்து மருந்து கொடுத் தும் பயன் இல்லை என்பதை அறிவித்தலாகும். ஐ என் பதே சொல். அதுவே கபம். ஈண்டு அஃது அம் என்னும் சாரியை கொடுத்துப் பேசப்பட்டது. கிட்டாதே என்றதன் நோக்கம், கபம் கட்டி மேல்மூச்சு விடுவதைப் பார்க்கச் சகிக்க முடியாது ஆதலின் என்க.