பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

359

359

உமிழ்நீர் மூலம் அறியும் குறி 355. உண்மைகேள் இன்னம் உமிழ்ந்திட நோய் உள்ளோன் தன்மையாய்த் துராம்போய்த் தாக்கிடில் சாவில்லை கண்மையாய் வாயில் கழன்றிடில் கிட்டிடும். வண்மையாய்ப் பார்க்க வகுத்தனர் கந்தியே.

- (இ - ள்) இன்னமும் சாகும் குறி சாகாக் குறிகளைக் கேள். நோய்வாய்ப் பட்டவன் எச்சிலை உமிழும்போது, அஃது ஒரே நிலையில் சிறிதும் சிதருமல் தூரத்தில் சென்று விழுமானல், அவனுக்கு விரைவில் சாவு ஏற்படாது. அந்நோயாளி எச்சிலை உமிழும் போது அது தூரம் விழாமல் வாயின் வழியே ஒழுகினல் விரைவில் அவனுக்கு மரணம் உண்டாகும். இவ்வாறு எனது குருநாதராம் நந்தி கூறினர். இதனை அறிந்து கொள்.

(அ - சொ) கிட்டிடும் - மரணம் வந்து அணுகும். வண்மை - வளம். கண்மை - கண்முன்.

(விளக்கம்) திருமூலர் தாம் சொல்வதிலும் குருநாதர் கூறிஞர் என்று அறிவித்தல், மக்கள் நன்கு உணர்வர் என்ற கருத்தில் நந்தி வகுத்தனர் என்றனர்.

மந்தம் வருவதற்குக் காரணம்

356. கானுமே மந்தம் கவளிக்கும் அன்னத்தால்

கானுமே மந்தம் கடுமா மிசம்மீறில் கானுமே மந்தம் கலந்தமாப் பண்டத்தால் காணுமே மந்தம் கருமேதிப் பாலுக்கே.

(இ - ள்) நாம் உண்ணும் சோறு மிகுதிப் பட்டாலும், மிதமிஞ்சிய மாமிச உணவாலும், மாவினல் செய்த பண்டங் களை உண்டலாலும், எருமைப் பாலைப் பருகுவதாலும் மந்தம் உண்டாகும்.