பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

§§ {}

(அ - சொ) மந்தம் - சீரணம் இல்லாமை. கவனிக்கும் உண்ணும். மேதி - எருமை.

(விளக்கம்) இங்குச் சோறு, மாமிசம், மாப்பண்டம்எருமைப்பால் முதவியவற்றை உண்ணக் கூடாது, பருகக் கூடாது என்பது கருத்தன்று. அளவுக்கு மீறி இவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்பதே ஆகும். திருமூலர் மாமிசம் உண்ணுதலையும் உடன் வைத்துக் கூறியிருப்பது கொண்டு புலால் உண்ணலை இவர் ஆதரிக்கிருர் என்று எண்ணுதல் கூடாது. ஈண்டு அஜீரணம் உண்டாதற்குரிய காரணங்களைக் கூற வந்தனர். ஆதலின், அந்த அஜீரணத்துக்குரிய புலால் உண்ணலையும் ஈண்டுக் கூறினர் என்க.

மேகநோய் வரக் காரணம்

357. மேகம் பிறந்தவிதம் சொன்னர் என்கந்தி

ஆகும் இளந்தைப் பருவம் அதில் மோகித்து போகம் தினம்செய்யின் புகல்மந்தத் தேகூடில் வாகப் பசியால் வழங்கும்சை யோகமே.

(இ - ள்) இளமைப் பருவத்தில் மாதர்மீது காதல்' மிகுந்து, தினம் தினம் புணர்ச்சி செய்து வந்தாலும், உணவு சீரணம் ஆகாமல் மந்தமாக இருக்கும் போது புணர்ந்தா லும், மிகுந்த பசியாக இருக்கும்போது கூடினலும், மேக ரோகம் ஏற்படும் என்று நந்தியம் பெருமான் கூறியுள்ளனர்.

(அ - சொ) ஆகம் - உடம்பு. புகல் - சொல்லப்படும். சையோகம் - புணர்ச்சி. வழங்கும் - மேக நோயைத் தரும். வாகப் பசி - மிக்க பசி

(விளக்கம்) மேக நோய் வாராமல் தடைசெய்ய வேண்டு மாளுல், அதிகமாக மாதர்போகத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். பசியுள்ளபோது, வயிறு மந்தமாக இருக்கும் போது, சம்போகம் செய்யக்கூடாது.