பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

7. திருமந்திரம் பற்றிய சில அரிய குறிப்புக்கள்

திருமூலர் செய்த திருமந்திரத்தின் உண்மைப் பெயர் யாது என்பதையும் அறிதல் இன்றிமையாதது. திருமந்திரம் திருமந்திர மாலை, மூவாயிரம் தமிழ், தமிழ் மூவாயிரம் என்பன திருமந்திர நூலைக் குறிப்பன. இதற்குச் சான்ருகத் திருமூலர் வாக்குகளான ‘மந்திரமாலை உறைப்பொடுங் கூடி நின் ருேதலும் ஆமே” என்றும், "மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்” என்றும், "முத்தி முடிவது மூவாயிரத்திலே’ என்றும் வருதல் காண்க. சேக்கிழார் வாக்கில் திருமத்திரம் திருமந்திரமாலை என்றும், தமிழ் மூவாயிரம் என்றும் கூறப் பட்டுள்ளன. ஞாலம் முதல் நான்கும் மலர் நல் திருமந்திர மாலை" என்றும், "தமிழ் மூவாயிரம் சாத்தி சாத்தி’ என்றும் வருவதைக் கவனிக்கவும். பதிபசுபாச விளக்கம் என்னும் நூல், 'மையல் தீர் திருமந்திரம்' என்று பகர்கிறது.

இப்போதுள்ள திருமந்திர நூல் வெளியீடுகள் பலவற்றில் முதல் பாடல் விநாயகர் வணக்கமாக,

ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை கந்திம கன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே என்று உளது. சேக்கிழார் கருத்து, முதற்பாட்டு ஐந்து கரத்தன என்பது அன்று. அவரது கருத்தின்படி, ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குனர்க் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பார்ச் சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே என்பது, -