பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

đ#

இதனே அவர் அறுதி இட்டு உறுதியாகக் கூறுபவராய் 'பரம்பொருளாம் ஏன எயிறு அணிந்தாரை ஒன்றவன்தான்' என எடுத்து முன்னிய அப்பொருள் மாலைத்தமிழ் மூவாயிரம் சாத்தி என்று பாடியுள்ளனர். இதற்குக் காாணம் திருமூலர் காலத்தில் விநாயகர் வணக்கம் தமிழ் நாட்டில் இல்லாகையே ஆகும். இக் கருத்தைச் சங்க நூற்களின் துணைகொண்டும், மாணிக்கவாசகர் வாக்கைக் கொண்டும் நிலை நாட்டலாம். சங்க நூற்களிலும் திருவாசகத்தும் விநாயகப் பெருமானப் பற்றிய பாடல்களோ தொடர்களோ பெயரோ இல்லாமை அப் பாடல்களை ஊன்றிப் படிக்குங்கால் உணரவரும் உண்மையாகும். - -

இனித் திருமந்திரங்களே எம்முறையில் பாடினர் என்பதை பும் சிறிது ஆராய்வோமாக. சேக்கிழார் பெருமாளுர் திருமூலர் திருமந்திர மூவாயிரம் பாடல்களையும் ஒவ்வோர் ஆண்டுக்கு ஒவ்வோர் மத்திரமாக மூவாயிாம் மந்திரப் பாடல் கண்ப்பாடிஞர் என்பர். இதனை,

போன்மைமுறை ஓர்ஆண்டுக் கொன்ருகப் பரம்பொருளாம்

ஏனளவி றணிந்தாரை ஒன்றவன்தான் எனஎடுத்து

என்றும். . -

முன்னியஅப் பொருள்மாலைத் தமிழ்மூஆயிரம்சாத்தி மன்னியமூ ஆயிரத்தாண் டிப்புவிமேல் மகிழ்ந்திருந்து

என்றும் கூறுதல் காண்க. ‘. . . . .

இவ்வாறு சேக்கிழார் கூறுதற்குத் திருமூலர் வாக்கு இடந்தருகிறதா என்பதை ஆராய்வோமாக. சேக்கிழார் கூறுவதுபோல ஆண்டுக்கு ஒரு மந்திரமாக மூவாயிரம் மந்திரங்களைப் பாடினுள் திருமூலர் என்பதற்கு அவர் வாக்கில் சான்றில்லை. ஆகமப்பொருளைத் தமிழில் செய்தார் என்ற தற்கு அவர் வாக்கில் சான்று உண்டு. அதனை முன்னே கண்டோம். ஆளுல், பல்லாயிரம் ஆண்டு நில உலகில் இருந்தார் என்பதற்கு அவர் வாக்கில் பல சான்றுகள் உள்ளன.