பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

45

இதனை இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி' என்றும்,

'ஒப்பில் ஒருகோடி யுகம் இருந்தேனே' என்றும்,

ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு ஊனயில் ஒன்பது கோடி உகம்தனுள் ஞானப்பால் ஊட்டிஎன் காதனை அர்ச்சித்து நானும்இருந் தேன்கல் போதியின் கீழே

என்றும் அவர் கூறுதல் காண்க. ஈண்டு எண்ணிலிகோடி, எழு கோடி, ஒன்பதுகோடி என்னும் எண்கள் உயர்வு நவிற்சி அணி என்னும் அலங்காரத்தில் அடங்குவதாயிலும், பற்பல ஆண்டு கள் வாழ்ந்தார் என்பதை அறிவித்து நிற்கின்றன என்று கூறுவதில் ஐயம் இல்லை. ஒருசிலர் எப்படிப் பற்பல ஆண்டு கள் உயிருடன் வாழலாம் என்று வினவக்கூடும். அதற்குரிய வழிவகைகளையும் அவரே கூறியுள்ளனர். இக்கருத்தினை ஆணையிட்டும் அவர் வற்புறுத்தி மொழிகின்றனர்.

"ஞாலம் அறிய கரைதிரை மாறிடும்

பாலனும் ஆவர் பராகக்தி ஆனேயே’

என்று ஆணேயுடன் கூறுதல் காணவும். பல்லாயிர ஆண்டு கள் உயிருடன் இருக்க உபாயம் யாது எனக் கூறுமிடத்து,

காட்டம் இரண்டும் நடுமுக்கில் வைததிடில்

வாட்டம் இல்லை மனைக்கும் அழிவில்லை

என்றும்,

காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்

கூற்றை உதைக்கும் குறிஅது ஆமே

என்றும்,

வளியிடை வாங்கி வயத்தில் அடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்

என்றும்,