பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

8. திருமூலர் சமாதியுள்ள திருவாவடுதுறையின் சிறப்பு

திருவாவடுதுறை என்னும் இத்தலம் மாயூரம் கும்பகோண ரயில் மார்க்கத்தின் இடையில் உள்ள நரசிங்கன் பேட்டை இரயில் அடியிலிருந்து தென் கிழக்கே ஒரு கல் தொலைவில் உளது. பேருந்து (Bus) வழியாகவும் இத்தலத்தை அடைய லாம். திருXஆxஅடுxதுறை என்று இப்பெயர் பிரிக்கப் படும். அதாவது இறைவி பசுவடிவுடன் இத்தலத்தினை அடைந்து இறைவனைப் பூசித்தனள். பின் பசு வடிவம் நீங்கப் பெற்றனள். ஆகவே, திருவாவடுதுறை என்ற பெயர் இத்தலத்துக்குப் பெயராக அமைந்தது. ஆ என்பது பசு. வடமொழியில் இத்தலத்தைக் கோமுக்திகேத்திரம் என்பர். இதனால் இத்தலம் 'கோகழி’ என்றும் கூறப்படும். அதாவது கோவாகிய (பசுவாகிய) வடிவம் நீங்கப் பெற்ற தலமாகும். இங்கு இத்தலத்துப் புராண ஆசிரியர், இறைவர் இறைவியை நோக்கி மாடேபோ' என்று கூறியதாகச் செய்யுள் யாத்துள் ளனர். அதன் பொருள் மாடாகப்போ என்பதோடன்றி, என் பக்கத்தே எப்போதும் இருப்பாயாக என்பதும் ஆகும்.

மற்றும் இத்தலத்துக்குப் பல சிறப்புக்கள் உண்டு. இங்குப் போகநாத சித்தரின் மாணவர் திருமாளிகைத் தேவர் ஆசிரியருக்குத் தொண்டு செய்து அருள்பெற்றுச் சைவ சமய நிரூபணம் செய்து, பல அற்புதங்களைச் செய்துள்ளனர். நவகோடி சித்தர்கள் சிவஞானம் பெறத் தவம் செய்துள் ளனர். அதனல் இதற்கு நவகோடி சித்தபுரம் என்னும் பெயரும் உண்டு. திருஞான சம்பந்தர் தன் தந்தையார் யாகம் செய்யும் பொருட்டு இத்தலத்து இறைவரிடம் ஆயிரம் பொன் பெற்றனர். தேவர்கள் இத்தலத்தில் படர் அரசு