பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

48

மயமாக இலங்குகின்றனர். இப்படர் அரசைக் கோயில் முன் நன்கு காணலாம். இம்மரத்தின் நிழலில் இறைவர் வீற்றிருக் சின்றனர்.

தருமதேவதை இங்குள்ள மாசிலாமணி ஈஸ்வரரை வழிபட, அதன் வழிபாட்டிற்கு இரங்கி அதனை வாகனமாகக் கொண்டதோடன்றி, அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும்படி இறைவர் கட்டளையிட்டருளினர். அதனையும் ஈண்டு நன்கு காணலாம். நந்தி பெரியது. இத்தலத்தில் போதி அம்பலம் என்னும் பெயரிய திருச்சபை உண்டு. இங்கு இறைவர் தேவர் களின் வேண்டுகோட் கிணங்கி மகா தாண்டவம் புரிந்தருளி னர். இங்குள்ள இறைவர் முனிவர்கட்குச் சிவஞான உபதேசம் செய்து அந்தணர்கட்கு வேதத்தின் பொருளை அருளிச் செய்தனர். போகசித்தர், நவகோடி சித்தர் முதலியோர்கட்கு அட்டமா சித்திகளையும் அருளிச் செய்தனர். இதஞல் சித்தர்கள் இங்கு எப்போதும் வசிப்பதாகக் கூறுவர் இத்தலத்துக் கோயில் மதில்கள்மீது நந்தி வடிவம் ஒன்றுகூட. இல்லாமல் இருப்பதை இன்றும் காணலாம். அதற்குக் காரணமும் கூறப்படுகிறது. அக்காரணம் பின்வருமாறு :

நரசிங்க மன்னன் என்பவன் நடு நாட்டையும், சோழ நாட்டையும் ஆண்டு வந்தவன். நடு நாடென்பது சோழ நாட்டிற்கும் தொண்டை நாட்டிற்கும் இடைப்பட்ட நாடாகும். இம்மன்னன் நரசிங்கமுனை.அரையன் என்றும் கூறப் பட்டவன். திருமுனைப்பாடி நாட்டைத் தலை நகரமாகக் கொண்டு ஆண்டு வந்தமையின் இப்பெயர் பெற்றவன். இவன் சோழநாடு செல்ல வேண்டுமானல் திருவாவடுதுறைக்கு அடுத்த பேட்டையில் தங்குவான். அங்ங்னம் அவன் தங்கிய இடமே நரசிங்கன் பேட்டையாகும். அதுவே இது போது ரயில் ஸ்டேஷனுக விளங்குகிறது. இம்மன்னன் பெரும் சித்தராகிய திருமாளிகைத் தேவரது பெருமையினை உணராமல், அவர்மீது போருக்குப் புறப்பட்டபோது, அவர் அவனது அறியாமையை நினைந்து இறைவியிடம் விண்ணப் பித்துக் கொள்ள, இறைவி கோவில் மதில்களில் இருக்கும்