பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

11. மறைபொருள் அமைந்த மந்திரங்கள்

திருமந்திர நூல் மந்திரம் என்பதற்கு ஏற்பப் பல மந்திரங் கள் மறை பொருள்களைத் தம்மிடத்தே கொண்டு திகழ் கின்றன. அவற்றுள் சிலவற்றை ஈண்டு எடுத்துக் காட்டுவது தக்கதாகும்.

1. வழுதலே வித்திடப் பாகல் முளைத்தது

புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது தொழுதுகொண் டோடினர் தோட்டக் குடிகள் முழுதும் பழுத்தது வாழைக் கனியே. இம்மந்திரம் தோட்டப் பயிரைப் பற்றிய சொற்களைக் கொண்டு திகழ்கிறது. இத் தோட்டப் பயிர்ப் பொருள்களின் மூலம், அரிய குறிப்பை மறைபொருளாகக் குறித்துள்ளனர். இம்மந்திரப் பாட்டின் பொருளை மேல் போக்காகப் பார்க்கும் போது, 'வழுதலங் கத்தரிக்காய் விதையை விதைத்தேன்; விதைக்கு ஏற்பக் காய்க்காமல் பாகல்காய் முளைத்தது. பின் மண்புழுதியைத் தோண்டினேன். பூசணி பூத்தது. இந்த மாறுபாடான நிகழ்ச்சியைக் கண்ட தோட்டக்காரர்கள் ஒடி விட்டனர். பின்னர் வாழைப்பழம் பழுத்தது' என்பது புலப் படும்.

ஆணுல், இப்பாட்டின் உள் பொருள், "யோகப் பயிற்சி யினை மேற்கொண்டேன். அதனுல் வைராக்கியம் வளர்ந்தது. தத்துவங்களை ஆராயத் தொடங்கினேன். இவ் வாராய்ச்சியின் பயனுகச் சிவம் வெளிப்பட்டது. சிவம் வெளிப்பட்டதும் ஐந்து இந்திரியங்களும் தொண்ணுற்ருறு தத்துவங்களும் நீங்கின. அதன்பின் திருவடிப் பேருகிய ஆன்ம லாபம்' கிடைத்தது என்பது.