பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

61

ஈண்டு வழுதலை வித்து யோகப் பயிற்சியினையும், பாகல் வைராக்கியத்தையும், புழுதியைத் தோண்டல் தத்துவ ஆராய்ச்சியையும், பூசணி சிவத்தையும், தோட்டக்குடிகள் இந்திரியாதி விடயங்களையும், வாழைக்கனி ஆன்ம லாபத்தை யும் உணர்த்தி நிற்கின்றன.

2. இரண்டு கடாஉண்டு இவ்வூரின் உள்ளே

இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன் இரண்டு கடாவும் இழுத்துப் பிடிக்கில் இரண்டு கடாவும் ஒருகடா ஆகுமே. இந்த மந்திரத்தின் மேற்பொருள், இவ்வூரில் இரண்டு கடா மாடுகள் உள்ளன. கடாக்களை மேய்ப்பவன் ஒருவனே. இவ்விரண்டு க டா க் க ளே யு ம் இழுத்துப் பிடித்தால், அவ்விரண்டு கடாக்களும் ஒரு கடாவாக மாறும் என்பது. ஆனல் இதன் உள்பொருள் வேறு. அதாவது இவ்வுடம்பில் இரேசக பூரகம் என்னும் இரண்டு கலைகள் உள. இக்கலைகளை நடத்துவது சீவான்மா. இச் சிவான்மா இருகலைகளைத் தம் போக்கில் போகவிடாமல் தடுத்துக் கும்பகத்தில் அமைத்தல் வேண்டும் என்பது. இதனை மேலும் விளக்கப் புகுந்தால், இட கலை, பிங்கலை வழியே வரும் காற்றை அடக்கி யோகம் புரிதல் வேண்டும் என்பது போதரும்.

3. பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு

மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கிளுல் பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ச் சொரியுமே. இதன் வெளிப் பொருள் பார்ப்பானுடைய வீட்டில் பால் தரும் பசுக்கள் ஐந்து உள. அவை மேய்ப்பார் இல்லாத காரணத்தால் வெறித்துத் திரிகின்றன. அப்பசுக்களை அடக்கி மேய்க்கும் இடையன் ஏற்பட்டால் அவை பாலே நன்கு சொரி யும் என்பதாம்.

இதன் உள் பொருள்: உடலில் ஐந்து இந்திரியங்கள் உள்ளன. அவை தம்மில் உலக விஷயத்தில் ஈடுபட்டு உழல்