பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

66

இத்துடன் இன்றித் திருச்சதகப் பகுதியில் ஒன்ருன காருண்யத் திரங்கல் என்னும் தலைப்பின்கீழ் அமைந்த பத்துப் பாடல்கள் போற்றிப் பாடல்களாகவே அமைந்துள்ளன.

எம்பிரான் போற்றி வானத்

தவரவர் ஏது போற்றி கொம்பரார் மருங்குல் மங்கை

கூறவெண் ணிற போற்றி செம்பிரான் போற்றி தில்லைத்

திருச்சிற்றம் பலவ போற்றி உம்பரா போற்றி என்ன

ஆளுடை ஒருவ போற்றி என்பது அப்பகுதியில் ஒரு போற்றிப் பாடல்,

போற்றிஓம் நமச்சிவாய

புயங்கனே மயங்குகின்றேன் போற்றிஓம் நமச்சிவாய

புகலிடம் பிறிதொன்றில்லை போற்றிஓம் நமச்சி வாய

புறம்எனப் போக்கல் கண்டாய் போற்றிஓம் நமச்சி வாய

சயசய போற்றி போற்றி. ஈண்டு நம என்னும் பொருளுக்குரிய போற்றி எனும் சொல் முன்னும் பின்னும் அமைந்துள்ளதைக் காண்க.

இவ்வாருன போற்றி அமைந்த தொடர்களுள் நமக்கு வேண்டியவாறு நூற்றெட்டு வரிகளையோ, ஆயிரத்தெட்டு அடிகளையோ அமைத்துக்கொண்டு, அர்ச்சனை புரியலாம்: போற்றி என்று அமையாமல் காண், தோன்றும் கண்டாய். தாமே, நீயே, போலும் என்று முடியும் தாண்டகங்களும் உள்ளன. அவற்றையும் அர்ச்சனைக்குப் பயன்படுத்தலாம், திருவாசகத்திலும் காண்க, வாழ்க, வெல்க என்னும் தொடர் கள் உள்ளன. அவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.