பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

#8

பரமன் காண்க பழையோன்காண்க பிரமன்மால் காணுப் பெரியோன் காண்க என்னும் அடிகளில் காண்க, என்றும் கூறியவற்றையும் சேர்க்கலாம்,

இவ்வாறெல்லாம் சேர்த்து இலட்சம் போற் றி த் தொடர்களை அமைத்துத் தமிழில் லட்சார்ச்சனை நடத்தலாம். இவ்வாறே, ஒவ்வொரு தெய்வத்தின் மீதும் பாடப்பட்ட பாடல்களுள், அந்தந்தத் தெய்வத்தின்மீது பாடப்பட்டுள்ள தொடர்களுடன் போற்றியைச் சேர்த்து அர்ச்சனை மந்திரமாக கதி வழிபடலாம். ஒவ்வொரு அடிகளைச் சொல்லி மலரைத் திருவடிகளில் இடுவதுதானே அர்ச்சனை

தமிழ் மொழியில் அர்ச்சனை நடத்தவேண்டுமெனக் கோயில் குருக்களிடம் வற்புறுத்தி வந்தால், அவர்கள் தேவைக்கு ஏற்பத் தமிழ் மொழியில் அர்ச்சனையை அப்படியே தடத்துவர். கேட்காதது, வற்புறுத்தாதது, பொதுமக்களுடைய குற்றமே ஆகும்.

பெரிய திருக்கோயில்களில் இறைவன் திருஉலாப் போதுங் கால், பின்னல் வடமொழி வேதபாராயணம் செய்துகொண்டு வருவதை இன்றும் காணலாம்.

அவ்வாறே தென்மொழி வேதமாகிய திருவாசகத்தில் உள்ள நான்கு பாடல்களே வேதம்போலப் பாராயணம் செய்து கொண்டு வரலாம்; நிறுத்தி நிதானமாக நமச்சிவாயவாழ்க, நாதன்தாள் வாழ்க, என்று சொல்லிப் பாருங்கள். வேத ஒலி போல இனிதாக ஒலிப்பதை உணர்வீர்கள். ஆகவே, தமிழ் மொழி வேதங்களை ஒதவும், தமிழால் அர்ச்சனை நடக்கவும் ஒவ்வொருவரும் முயற்சி எடுத்தல்வேண்டும். - தமிழிலும் வேதாகமவிதிகள் நடக்கவேண்டும் என்ற கருத்தில்தான், கண்ணுதல் பரமனும் திருமூலரைத் தமிழில் திருமந்திரம் பாடுமாறு செய்தனர். இதனைத் திருமூலரே,

என்ன கன் ருக இறைவன் படைத்தனன் தன்னே கன் ருகத் தமிழ்ச் செய்யு மாறே.

என்று கூறி இருப்பதைக் காண்க.