பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

13. ஒத்த கருத்துடைய ஓர் இருபுலவர்கள்

சீரும் சிறப்பும், பேரும் புகழும் பெற்ற நந்தம் செந்தமிழ் மொழியில் புலவர் என்னும் சொல், பொருளாழம் பெற்ற சொல்லாகும். புலமை எவர்க்கு உளதோ, அவரே புலவர் என்று புகலப் படுதற்குரியவர். இது குறித்தே பொய்யா மொழிப் புலவர்,

'அறமுறைத் தானும் புலவன்முப் பாலின் திறமுறைத் தானும் புலவன்-குறுமுனி தானும் புலவன் தரணி பொறுக்குமோ யானும் புலவன் எனில்.”

என்று விளக்கமுற விளம்பிச் சென்றுள்ளார். ஆகவே, புலமை வன்மை படைத்த இருபெரும் புலவர்களைக் குறித்துப் புகலப் புகுவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

அவ்விரு புலவர்கள் யாவரெனில், அவர்கள் திருமூலரும் திருவள்ளுவருமே ஆவர். திரு என்னும் அடைமொழி இவ்விரு புலவர் பெரு ம க் க ள் பெயர்க்குமுன் அமைந்திருப்பது கொண்டே, இவர்களது மாண்பினை நன்குணர்ந்து கொள்ள லாம். திரு என்னும் மொழி பல பொருள்களைக் குறிக்கும் பான்மைபெற்ற சொல்லே ஆயினும், பேராசிரியர் கொண்ட பொருள், கண்டாரால் விரும்பப்படும் தன்மை என்பது. எனவே, இவ்விரு புலவர் மணிகளும் கண்டாரால் விரும்பப் படுபவர் என்பதில் ஐயம் எழ இடம் இல்லை அன்ருே? இவர்கள் ஒப்பற்ற அறிவு ஒளி பெற்றவர். ஆதலின் "ஓர் என்ற அடை

இது நீவைகுண்டம், குமரகுருபரன் பத்திரிகையில் எழுதிய கட்டுரை. - --