பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

70

மொழி "இருபுலவர்” என்பதற்கு முன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே ஈண்டு ஒர் என்பது எண்ணைக் குறிக்காமல், ஒப்பற்ற என்ற பொருளைக் குறிக்கிறது என்பதையும் நாம் அறிதல் வேண்டும். இன்னுேரன்ன இயல்புகட்கு இடகை உள்ள இவ்விரு புலவர்களின் கருத்துக்களும் ஒற்றுமையுடையன வாகவே இருக்கின்றன.இதில் எள்ளளவும் ஐயமில்லை. இனி, எவ்வெம் முறையில் கருத்து ஒப்புமை காணப்படுகிறது என்பதை ஆராய்வோமாக. இவ்விரு பெரும் புலவர்களின் கருத்துஒற்றுமையினே இவர்கள் யாத்துள்ள நூலின் வாயிலாக தான் நன்கு உணரலாம்.

திருமூலர் திருவாய் மலர்ந்த நூல் திருமந்திரம். திருவள்ளுவர் திருவுளம் கொண்டு யாத்தநூல் திருக்குறள். இவ்விரு ஆசிரியர்கள்தம் பெயர் முன் திரு” என்னும் அடை மொழிச் சிறப்புடன் திகழ்வது போலவே, இவ்விருவர் செய்த நூல்களும் திரு என்ற அடைமொழியுடன் அமைந்திருப்பது கொண்டே இந்நூற்களின் ஏற்றத்தை இனிதின் உணரலாம்.

கருத்து ஒற்றுமைகளை நாம் காணும் முன், இவ்விரு நூல் களின் காலத்தையும் சிறிது அறிந்து கொள்ளுதல் சாலவும் பொருத்தமானது. சிலப்பதிகாரத்தில் திருக்குறள் ஆட்சி காணப்படுவதே சிலம்புக்கு முற்பட்டது குறள் என்பது பெறப் படும். சிலம்பின் காலம் செங்குட்டுவன் காலமாகும். செங்குட்டுவன் இலங்கை முதலாம் கயவாகுவின் காலத்தவன். இம் முதலாம் கயவாகு திகழ்ந்த காலம் இற்றைக்குச் சற்றேறக் குறைய 1820 ஆண்டுகட்கு முற்பட்டது என்பதை இலங்கைச் சரித்திரம் கூறுகிறது. இக் கயவாகு கண்ணகிக்குக் கோவில் எடுத்த விழாவில் கலந்து கொண்டனன் எனச் சிலப்பதிகார மும் கூறுகிறது. இதனே,

'அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்

பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்

குடகக் கொங்கரும் மாளுவ வேந்தனும்

கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்.”