பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

14. உபதேசம்

பூரீ-ல-யூரீ மகா சந்நிதானத்தின் பொன்னர் திருவடிட்கும் முனியுங்கவர்கட்கும், அவைத் தலைவர் அவர்கட்கும், சிவநேயச் செல்வர்கட்கும் அன்பு கலந்த வணக்கம் உரித்தாகுக.

திருமந்திரம் முழுமையுமே ஆகமத்தின் சாரமாகும் இதனை ஆசிரியர் திருமூலர்,

"சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே" என்று கூறியிருத்தலாற் காணலாம். ஆகவே முதல் தந்திரம் காரணுகமத்தின் சாரமாகும். உபதேசம் என்பதற்குப் பொருள் உடன் இருந்து உணர்த்துவது என்பதாம். காட்டு வது என்று கூறினும் அமையும். சிவஞான சித்தியார், உப தேம் இன்னது என்பதை விளக்குகையில்,

'தளுதியீ றிலாதான் தன்மை

உணர்த்துதல் உபதே சந்தான்'

என அறிவிக்கிறது. காட்டுவது, உணர்த்துவது என்னும் பிறவினைச் சொற்களால் இங்ங்ணம் காட்டுபவனும் உணர்த்து பவனும் ஒருவன் இருத்தல் வேண்டும் என்பது புலகுைம். அவ்வொருவனே குருவாவான், இங்ங்ணம் குருபர்ளுய் வருபவர் நந்தியே ஆவர் என்பதை ஆசிரியர் பல இடத்தும் பாடியுள்ளார். இதனை,

“கந்தி வழிகாட்ட கான்இருக் தேனே' எனக் குருபரம்பரையிலும்,

'கந்தி அருளாலே கான் இருந்தேனே' எனத் திருமூலர் வரலாறு என்ற இடத்தும் கூறுவதால் அறியலாம்.

இது_ திருவாவடுதுறையில் நடந்த ஆருவது திருமந்திர மாநாட்

டில் பேசிய பேச்சு.