பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

73

நந்தி என்ற சொல் இறைவனுக்குத் தொண்டு செய்யும் அதிகார நந்தியை உணர்த்துவதன்றி, முழுமுதற் பரமனும் முக்கண் மூர்த்தியை உணர்த்தி நிற்கிறதோ என்னும் ஐயமும் தோன்றக் கூடும். அந்த ஐயத்தினையும் நீக்கத் திருவுளம் கொண்ட திருமூலர், நந்தி எனக் கூறப்பட்டவர் ஈண்டு முக்கண் மூர்த்தியே ஆவார், அவரே குருவாக வந்து உப தேசம் புரிவார் என்பதை, உபதேசத்தில்,

'களிம்ாயறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி களிம்பறுத் தான் அருள் கண்விழிப் பித்துக் களிம்பணு காத கதிர்ஒளி காட்டிப் பளிங்கில் பவளம் பதித்தான் பதியே”

என வரும் பாட்டால் அறிவிப்பர். களிம்பு என்பது ஆணவம் அருட்கண் விழிப்பித்தல் ஞானக் கண்ணை விழிக்கச் செய்வது; கதிர்ஒளி காட்டுதல் ஞான ஒளியினைக் காட்டுதல்; மலம் நீங்கப் பெற்ற மனம் தூயதாய்ப் பளிங்குபோல இருப்பினும், சிவபூசை, அடியார்வழிபாடு, ஆலயதரிசனம், ஐந்தெழுத்து ஒதுதல் முதலானவற்றைச் செய்யாமல் மறந்தபோது, ஆணவ இருள் மீண்டும் வந்து சூழ்தல் இயல்பாதலின், அங்கனம் சூழ்ந்திருக்கவே ஞாளுசிரியன் திருவருட் சத்தியைப் பதிய வைப்பன்; அப்படிப் பதிய வைத்தலேயே ஈண்டும் பளிங்கில் பவளம் பதித்தான் பதியே' என்றனர். கண்ணுதல் நந்தி: என்னும் தொடரால், நந்தியாக வருபவன் கண்ணுதல் என்பது புலனுயிற்று. இக்கருத்தை மீண்டும் நன்கு நம் உள்ளத்தில் பதிய வைக்கவே,

'மலங்களேந் தாமென மாற்றி யருளித் தலங்களைக் தான்கற் சதாசிவ மான புலங்களைக் தான்கற் பொதுவினுள் நந்தி கலங்களைக் தான்.உள் நயந்தா னறிந்தே" என்றும் உபதேசத்தில் உபதேசித்தார். சதாசிவம் ஆன பொதுவினுள் நந்தி என்ற தொடர்களை நோக்கவும். மலங்கள் ஐந்தாவன ஆணவம், கன்மம், மாயை,திரோதாயி,