பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

தங்கியவாரும். ஒளியில் ஒளிபோய் ஒடுங்குதலாவது திருவடி உணர்வு கைவந்த அருள்ஒளி, உயிர் சிவ வொளியில் ஒடுங்கு தலாகும்.

இச் சிவ சித்தர்களைச் செம்பொருட்டுணிவினர் என்றும் கூறவாம். இவர்கள் உலகில் சிவலோக தரிசனம் செய்து ாண்டும். நாதத்தையும் நாதர்ந்தத்தையும் தம்முள் கொண்டும் நித்தராகவும், மலம் அற்றவராகவும், உருவற்ற வராகவும் விளங்கிப் பரமுத்தியை அடைவர்.

மேலும், இந்தச் சித்தர்கள் உணர்வற்ற செயலற்ற நிை யில் சிவமாகியும், தாமாகியும், சிவன் செயலால் யாவையும் நோக்கியும், முக்கால இயல்புகளை நன்கு அறிந்தும் இருப்பர். இதனை,

"இருந்தார் சிவமாகி பெங்குந் தாமாகி

இருந்தார் சிவன்செயல் பாவையும் நோக்கி இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங்கு இருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே' என்ற மந்திரத்துக் காண்க. இழவாவது யான் எனது என்னும் பற்று ஒழிந்த நிலையாம். சோம்பி இருத்தல் உணர்ச்சியற்று ஆனந்த வடிவாய் அமர்ந்திருத்தலாகும். இந்நிலையில் இவர்கள் இருத்தலின், இவர்களைத் திருமூலர் சோம்பர் என்கின்ருர். தற்செயல் அற்றுச் சிவச் செயலாக இருப்பவர் என்பது இதன் பொருள். இவர்களைப் பற்றி மேலும்,

"சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பது சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ் சோம்பர்கண் டாரச் சுருதிக்கண் துக்கமே” என்று பாடினர். அதாவது இவர்கள் ஞானகாசமாகிக சுத்த வெளியில்தான் இருப்பதும் கிடப்பதும் ஆக இருப்பர். இவர்களது உணர்ச்சி வியாபிக்கும் இடம் வேதங்களின் முடிந்த இடமான நாதாந்தமாகும். அந்த வேத முடிவின்