பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

z

இருந்து 340 திருமந்திரங்களும், திருமூலர் பாடியதாகக் கருதப் படுகின்ற வைத்தியப் பகுதி என்னும் நூலிலிருந்து 25 மந்திரங் களும் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இத்தகைய அரிய சீரிய தமிழ்மந்திரமாம் இத்தொகுப்பு நூலைத் தொகுக்க எனக்கு உணர்வைத் தந்த அம்மை அப்பரது பொன்னர் திருவடிகட்கு என் வாழ்த்தும் வணக்கமும் முதற்கண் உரியன ஆகும். இதற்குப் பாராட்டுரைகளைத் தந்து என்னை ஊக்குவிக்கும் சிவவேடப் பொலிவு பெற்ற மெய்ஞ் ஞான சீலர்கட்கும், எனது இயற்றமிழ் ஆசிரியர்க்கும், பேரறிவு படைத்த பேரறிஞர்கட்கும் எனது பணிவான வணக்கம் உரித்தாகும்.

இந்தத் தொகுப்பு நூலில் ஒவ்வொரு மந்திரங்களின் தலைப்பிலும் உள்ள கருத்து வரிகளையும், மந்திர முதற்குறிப் புக்களையும் அகர வரிசைப்படுத்தித் தந்த எனது மகளிர் திரு வளர் செல்விமார் கற்பகாம்பிகை, தமிழ் அரசி, இசை அரசி ஆகிய இவர்கள், அம்மையப்பரது ஆர் அருள் பெற்றுச் சீரும் சிறப்புடன் பல்லாண்டு வாழ அவனது பொன்னர் திருவடிகளே வந்தித்து வாழ்த்தி வணங்குகின்றேன்.

-பாலூர் கண்ணப்ப முதலியார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மந்திரம்.pdf/9&oldid=571186" இலிருந்து மீள்விக்கப்பட்டது