பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

象蟹

கூர்மையாவது கரிப்பு உப்பாம். ஆதித்தன்-சூரியன். அவ்வுருஉப்பாகிய உரு. இவ்வாறு சூரியன் வெப்பத்தால் உப்பானலும் நீருடன் கலந்தபோது நீரே ஆகும். அதுபோலச் சங்கார காலத்துத் தத்தம் கன்மங்கள் சூட்சும கன்மமாய்த் தன்னுள் அடங்க, ஆன்மாக்கள் அனைத்தும், சிவத்துடன் அடங்கி நின்று, இறைவன் மீட்டும் உயிர்களைத் தோற்றுவிக்கத் திருவுளம் கொண்டபோது, தத்தம் வினைக்கீடாக மேனியில் அடங்கி உலகத்தில் உலாவி, முத்தான்மாவாகச் சிவத்துள் அடங்கும் என்பதாம்.

இறைவனது திருவடியினைப் பெறத் திடஞானம் வேண்டும் என்று உபதேசிக்கும் மந்திரமே,

'அடங்குபே ரண்டத் தணுவண்டஞ் சென்றங்கு

இடங்கொண்ட தில்லை யிதுவன்றி வேறுண்டோ கடந்தொறும் கின்ற வுயிர்கரை காணில் திடம்பெற கின்ருன் திருவடி தானே'

என்பது. மேலும் திருவடியே ஞானம் என்பது நமது சித்தாந் தத் துணிபு. இதனைத் திருவடிப்பேறு என்னும் பகுதியில்,

'திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்

திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே" என்று உணர்த்தினர். இங்ங்ணம் கூறுமாற்ருல் திருவடிஞானம் பெறத் திடஞானம் தேவை என்பது உறுதி ஆயிற்று. ஆகவே, ஆன்மாக்கள் தாம் எய்தும் இடம் ஆராயின் இறைவன் திருவடியே என்பர். இதனை உயிர் கரைகாணில், திடம்பெற நின்ருன் திருவடிதானே' என்ற அடிகளில் காண்க. உயிர்கள் உடல் தோறும் நிற்கும் நிலையையே ஈண்டுக் கடந்தொறும் நின்றஉயிர் என்றனர். காரியம் காரணத்துள் அடங்குதல் அன்றிக் காரணம் காரியத்துள் அடங்குதல் இல்லை. ஆதலின் பிரமாண்டங்கள் அண்ட வடிவான அணுவுள் அடங்குமே