பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

15, வயிரவச் சக்கரம்

குருமகா சந்நிதானத்தின் பொன்னுர் திருவடிகட்கு என் பணிவான வணக்கம் உரித்தாகுக. சிவநேசச் செல்வராம் தலைவர் அவர்களுக்கும், சபையோர்கட்கும் என் வணக்கம் உரியது. பெரியோர்களே! குருமகாசந்நிதானம் அவர்களின் திருவடிகளை என் தலைமேற்கொண்டு, எனக்கு இட்ட கட்டளை யினை ஆற்றத் தொடங்குகிறேன்.

நான்காம் தந்திரத்தில் பதின்மூன்று பகுதிகள் இருந் தாலும், அவற்றுள் மிகச் சிறிய பகுதியாக, ஆறு திருமந்திரங்கள் மாத்திரம் அடங்கியுள்ள வயிரலச் சக்கரம், என்ற தலைப்பை எனக்குக் கொடுத்திருப்பதிலிருந்தே குருமகா சந்நிதானம் அடியேனிடத்தில் கொண்டுள்ள கருணை நன்கு புலளுகிறது. மணிவாசகப் பெருமாளுர்,

'பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து' என்று பாடித் தம்பால் இறைவன் காட்டிய பெருங் கருணை யினைப் புலப்படுத்தியது போலக் குருமகாசந்நிதானம் என்பால் கருணை காட்டி ஆட்கொண்டார்கள் என எண்ணி யான், பெரு மகிழ்ச்சி கொள்கின்றேன். மிகச் சின்னஞ்சிறு குழவி, முதன் முதலாக நம்முடைய சந்நிதானத்திலே இத் திருமந்திர மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கிறது என்கிற பெருங் கருணையினல், பால் நினைந்து ஊட்டும் தாயினைப் போல், என்னுடைய பக்குவம் அறிந்து, இந்தச் சின்னஞ்சிறு தலைப் பிலே என்னைப் பேசும்படி அருளான பிறப்பித்திருப்பதை எண்ணி எண்ணி இன்புறுகிறேன்.

வயிரவச் சக்கரத்திலுள்ள மந்திரங்கள் சிறப்புடைய கருத்துக்கள் செறிந்தவை. குருமகாசந்நிதானம் அவர்கள்

இது திருவாவடுதுறை ஆதினத்தில் நடந்த ஐந்தாவது திருமந்திர மாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவு. - . . .