பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

g?

நினைக்கக்கூடும். அந்த முறையில் நம் திருமூலர் விடுவரோ என்று ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும்.

சக்கரம் என்பது எது? வண்டியின் சக்கரம் போன்று உருளையாக இருப்பதா?, என்று நினைக்கக்கூடும். ஈண்டுச் சக்கரம் என்பது சித்திர வடிவில் இருக்கிற சதுர வடிவில் அமைந்த சக்கரமாக விளங்குவதே யாகும். இவ்வயிரவச் சக்கரத்தைப் பற்றிய வடிவக் குறிப்பு, மந்திரக் குறிப்பு இப் பகுதியில் இல்லாமற் போயினும், நான்காவது தந்திரத்தில் உள்ள திருவம்பலச் சக்கரம் என்ற பகுதியில், இரண்டு திருமந் திரங்களில் குறித்திருப்பதைக் காணலாம்.

"எட்டு வரையின்மேல் எட்டுவரை கீறி

இட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில் வட்டத்தி லே அறை நாற்பத்தெட் டுமிட்டுச் சிட்டஞ் செழுத்தும் செபிசீக் கிரமே. "தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்

ஆன.இம் மூவரோ டாற்றவர் ஆதிகள் ஏனைப் பதினைந்தும் விந்துவும் காதமும் சேனையும் செய்சிவ சக்கரம் தானே"

இந்த இரண்டு திருமந்திரப் பாடல்களுள் முதல் மந்திரப் பாடலில் சக்கரத்தை அமைக்கவேண்டிய குறிப்பையும், இடையில் அமைக்க வேண்டிய இறைவன் எழுத்தையும், உச்சரிக்க வேண்டிய மந்திரம் இன்னது என்பதையும் குறிப் பிட்டிருப்பதைக் காண்க. இரண்டாம் திருமந்திரப் பாடலில், சிவச்க்கரத்தில் அமையும் தெய்வங்களைப் பற்றிய விளக்கம் தந்திருப்பதைக் காணலாம். இதில் சட்டர் என்று குறிப்பிடப் பட்டவர் வயிரவர் ஆவர்.

இந்தத் திருவம்பலச் சக்கரம் என்கிற பகுதியை ஊன்றிப் பார்க்குமிடத்து, வயிரவச் சக்கரம் என்பது சிவசக்கரம் எனப் புலனுகிறது. இக்குறிப்பினை மேலே காட்டப்பட்ட இரு பாடல்கள் தெள்ளத் தெளியக் காட்டுகின்றன. திருமந்திரம்

த.-7