பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6

தமிழ் மருந்துகள், காலத்தால் முந்தியும், திறமையால் மிகுந்தும், விலையால் குறைந்தும், கையாள்வதில் சிறந்தும் இருந்தும், அது தமிழ் மன்னர்கள் இறந்தும், தமிழரசு அழிழ்ந்தும், தமிழ் உணர்ச்சி குறைந்தும்விட்ட காரணத்தால், தன் சிறப்பை இழந்து வருகிறது. தமிழ் மருத்துவர்களும் வறுமை வாய்ப்பட்டுத் தவறு செய்கின் றனர். தோன்றிய தமிழ் மருத்துவ உயர்நிலைப் பள்ளியும் எடுபட்டுப் போயிற்று. இருக்கும் ஒரு கல்லூரியும் தவறான பாதையில் திருப்பிவிடப்பட்டிருக்கிறது. தாய் வழி மகள் காதுவழிக் கேட்டு, கைவைத்தியமாகச் செய்து வந்த பிள்ளை வைத்தியம், குடும்ப வைத்தியம் அருகி மறைபட்டு வருகிறது. இது நாட்டின் தீமையே யாகும்.

தமிழ் மக்களுக்கு உணர்ச்சி வராதா? தமிழ் நாடு தன்னரசு பெறாதா? தமிழ் மருத்துவம் தன்னிடத்தை அடையாதா? வரும், பெறும், அடையும் என்று நான் நம்புவதுண்டு. அதற்குரிய முதற்படியும் சிறுபணியுமே இந் நூல். இந் நூலிற் கூறப்பெற்றுள்ள அனைத்தும் எங்கள் பெரும் குடும்பத்திற் கையாண்ட 100-க்கு 80-ம் 90-ம், 100-க்கு 100-ம் வெற்றிபெற்ற அனுபவ உண்மை களாகும். தமிழக மக்கள் இதனைப் பயன்படுத்திப் பயன் அடைவார்களாக!

வாழ்க தமிழகம்

திருச்சி

தங்களன்பிற்குரிய

5-3-52

கி. ஆ. பெ. விசுவாாதம்