பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

5. நெல்லி முள்ளியும், வெந்தய்மும் வறுத்துப் பொடி செய்து தயிரிற் கலக்கி உண்டால், மூலக் கடுப்பு உடனே விலகும்.

இரண்டு வேளைக்குமேல் மருந்து தேவையிராது, காலை நேரத்தில் மட்டும் அருந்தவும்.

6. அறுகம் புல்லைத் தளிராக மூன்று அல்லது ஐந்து இலையுள்ளதாக எடுத்து வந்து அரைத்துப் பசுவின் பாலிற் கரைத்துக் குடிக்க மூலக்கடுப்பு, இரத்தம் விழுதல், மூல முளை, தேகக் காங்கை முதலியவை தீரும். ஐந்து நாளைக்குமேல் சாப்பிட வேண்டியதில்லை. காலையில் ஒரு வேளையே போதுமானது.

நல்லெண்ணெய், புகையிலை, புளி, மிளகாய் கூடாது.

7. பால்துத்தி இலையைக் கொண்டு வந்து பசுவின் பாலைத் தெளித்து வதக்கிக் கட்ட மூலக் கடுப்பு உடனே தீரும்

8. துத்தி இலையைக் கொண்டு வந்து, ஆமணக்கு எண்ணெய் ஊற்றி இரும்புக் கரண்டியில் வதக்கிக் கட்ட மூலநோய் நீங்கும். கட்டி, ரணம் முளைகளும் நீங்கும்.

இரத்த மூலத்திற்கு

பிரண்டையை நெய் விட்டு வறுத்து அரைத்து, கொட்டைப் பாக்கு அளவு காலை மாலை இருநேரமும் சாப்பிட, இரத்த மூலம் நீங்கும். 3 நாள் மருந்து போதுமானது.

வயிற்றுக் கடுப்புக்கு

சப்பாத்திக் கள்ளிப் பழச்சாறும் சீனியும் கலந்து மூன்று நாள் மாலை நேரத்தில் சாப்பிட, வயிற்று. உழைச்சல் தீரும். மூன்று நாட்களும் கண்டிப்பாய் மிளகாய். காரம் கூடாது.