பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

சீதக்கடுப்புக்கு

முற்றின கடுக்காய் ஒன்றைப் பழைய துணியிற் சுற்றி நன்றாக எறியவிட்டு, எரிந்த தோலை (கொட்டையை நீக்கிவிட்டு) மட்டும், நன்றாகப் பொடி செய்து விளக்கெண்ணெயிற் குழைத்துக் கொடுக்க, வயிற்றுக் கடுப்பு, சீதம், வெண்சீதம், இரத்தப்போக்கு, கடுப்பு முதலியன உடனே விலகும். பெரியவர்களுக்கு 3 விரலால் எடுக்குந் தூளும், குழந்தைகளுக்கு 2 விரலால் எடுக்குந் துளும் அளவு. 3 வேளை மருந்து போதும். காரம் கூடாது.

மேகப் பித்தத்திற்கு

பேயம் பழத்தில் சர்க்கரையும், சீரகமும் கூட்டிச் சிறிது பசுநெய்யுங் கலந்து பிசைந்து, காலை வேளைகளில் அருந்த மேகப் பித்தம் தீரும்.

மேக நோய்க்கு

அவரை இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்கு அளவு காலையும் மாலையும் மூன்று நாட்கள் சாப்பிட, மேக வியாதிகள் பலவும் தீரும். மூன்று நாட்களும் உப்பில்லாப் பத்தியம் இருக்க வேண்டும்.

சிறுநீர் எரிச்சலுக்கு

ஓரிலைத் தாமரையை அப்படியே உலர்த்தி இடித்துத் துணியால் வடிகட்டிப் பசுநெய்யிற் கலந்து உட்கொண்டால், சிறுநீர் எரிச்சல் உடனே விலகிவிடும் மூன்று வேளை மருந்து போதுமானது. பத்தியம்.இல்லை.

நீர்ச் சுருக்குக்கு

வாழைக்கிழங்கை அரைத்து, எலுமிச்சங்காய் அளவு எடுத்து, துணி சுட்டுக் கருக்கிய சாம்பல் 2 வராகனிடை சேர்த்து, விளக்கெண்ணெயில் குழப்பிச் சாப்பிட, நீர் அடைப்பு, நீர்ச் சுருக்கு, நீர்க் குத்தல் நீங்கும். எந்த