பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

நேரமும் அருந்தலாம். இரண்டே வேளை மருந்து போதுமானது. பத்தியமில்லை.

சிறுநீரில் தித்திப்பு இருந்தால்

எள்ளுப் புண்ணாக்கை இடித்து மண் இல்லாமல் சலித்து எடுத்து, நாட்டுச் சர்க்கரை சிறிது கலந்து சாப்பிட, சிறுநீரில் உள்ள தித்திப்பு தொடக்க நிலையிலிருந்தால் மாறும். பாகற்காய் சூப்பும் பயன் தரும்.

மூத்திரப்பை சுத்தி அடைய

எலுமிச்சம் பழச்சாறு கலந்த ரசம், சர்பத், மோர் இவைகளைச் சாப்பிட, மூத்திரப் பைக் கோளாறுகள் அனைத்தும் விலகும். இது நீர் எரிச்சலை உடனே நிறுத்தும்.

நீர் பிரிய

வெள்ளரி விதையை அரைத்து, வயிற்று உப்புசத்தின் மீது பற்றுப் போட்டால் உடனே நீர் பிரியும்.

வாய் வேக்காளத்திற்கு

1. திருநீற்றுப் பச்சிலையை வாய்கொண்ட மட்டும் போட்டுத் தினந்தோறும் அதிகாலையில் மட்டும் மென்று தின்ன, வாய் வேக்காளம் தீரும். ஐந்து நாள் தின்பது போதுமானது.

2. வெதுப்படக்கி இலையைக் கொண்டுவந்து கீழும் மேலும் வைத்து நடுவில் ஒமத்தை வைத்து, சிறிதளவு தண்ணிர் விட்டு வேடுகட்டி வேகவையுங்கள். பிறகு அதை அப்படியே இடித்துச் சாறு பிழிந்து கொடுங்கள். குழந்தைகளின் உட்புண், மாந்தம், வாய் வேக்காளம் முதலியவை தீரும்.

வாய்வுப் பிடிப்புக்கு

தழுதாளை இலையைக் கொண்டு வந்து தண்ணிரிற் போட்டு நன்றாகக் கொதிக்க வையுங்கள். கொதிப்பு