பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


பாம்பு கடிபட்டவன் பற்கள் கிட்டியிருந்தால், சில வாழைப் பட்டைகளை முதலில் உரித்து, கீழே சரியாக விரித்து, அதன்மேல் அவனைப் படுக்கவைத்து விடுங்கள்: பிறகு சாறு பிழியுங்கள். சாறு பிழியவும் அவன் வாய் திறக்கவும் நேரம் சரியாக இருக்கும். பிறகு சாற்றைக் குடிப்பான்; எழுந்து நடப்பான்.

இந்தச் சஞ்சீவிச் சாறு நல்ல பாம்புக் கடிக்கு 10-க்கு 10-ம், பிற பாம்புக் கடிகளுக்கு 10-க்கு 7-ம் உயிர் கொடுத்து குணப்படுத்தி வந்திருக்கிறது. இச் செய்தியை உங்கள் ஊரிலுள்ள அனைவருக்கும் சொல்லி வையுங்கள்.

பாம்புக் கடிக்கு

பெரியா நங்கை இலையை அரைத்துச் சிறு சுண்டைக் காய் அளவு சாப்பிட, உடனே குணம் தெரியும். அன்று முழுதும் உப்பில்லாப் பத்தியம் இருந்து தீரவேண்டும்.

விஷம் ஏறாமல் இருக்க

பாம்பு, நட்டுவாக்காலி, தேள், சிலந்தி முதலிய எது கடித்தாலும், உடனே பெருமருந்து வேரை வாயில் அடக்கிக்கொள்ளுங்கள். இச்சிகிச்சையால் விஷம் ஏறாது. பிறகு விஷக்கடிக்குச் சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.

நட்டுவாக்காலி கடிக்கு

நட்டுவாக்காலி கடித்துவிட்டால் பயப்பட வேண்டிய தில்லை. உடனே ஒரு கொப்பரைத் தேங்காயை மென்று தின்னச் செய்யுங்கள். கிடைக்காவிட்டால் முற்றிய தேங்காயை மென்று தின்னச் செய்யுங்கள். பல்லில்லாக் குழந்தைகளாகவோ, வயது முதிர்ந்த பெரியவர்களாகவோ இருந்தால், தேங்காய்ப் பாலைப் பிழிந்து குடிக்கச் செய்யுங்கள். நிமிடக் கணக்கில் குணந்தெரியும். மனக் கவலை, பணச் செலவு, மந்திரம், மருந்து எதுவும் வேண்டியதில்லை.