பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தேள் கடிக்கு

நாயுருவி வேரைப் பச்சையாக மென்று, சாற்றை மட்டும் உட்கொள்ள, உடனே நெறி இறங்கும்.

நாய் கடிக்கு

கடிச்சா செடிப் பட்டையை நசுக்கி வைத்துக் கடித்த விடத்திற் கட்டினால் அதன் நச்சு நீங்கிவிடும்.

பூரான் கடிக்கு

பனை வெல்வத்தை உடனே உட்கொண்டால் அதன் நச்சு நீங்கும்.

சிலந்தி கடிக்கு

ஆடாதொடை மூலிகையைப் பச்சை மஞ்சளுடனும் மிளகுடனும் அரைத்து, கடித்தவிடத்தில் வைத்துக் கட்ட, உடனே குணமாகும்.

மேகப் படைக்கு

பேயாவாரை என்றும், பொன்னாவாரை என்றும் சொல்லப்படுகிற ஒரு செடியை, வேரோடு கொண்டுவந்து அரைத்து மேலே பற்றுப்போட, நமைச்சல், சொரிந்தால் தூள் சிந்துதல், மேகப்படை முதலியன நீங்கும்.

படை சிரங்குக்கு

படை, சிரங்கு முதலிய புண்களுக்கு ரச கற்பூரம் 1 பங்கும், வெண்ணெய் 3 பங்கும் கலந்து கல்வத்திவிட்டு அரைமணி நேரம் நன்றாக அரைத்துத் தடவக் குணமாகும். இருமலைக் காட்சி என்றும் பிரமலைக் காட்சி, என்றும் சொல்லப்படுகிற முட்செடி கிடைக்குமிடங்களில், அதை எடுத்து அதன் சாம்பலில் சம பங்கு இவற்றுடன் சேர்த்துத் தடவினால், மூன்றே வேளையில் குணம் தெரியும். மருந்தைப் பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் மருந்து நச்சுத் (விஷம்) தன்மை உடையதாகும்.