பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

சொரி சிரங்குக்கு

சென்னைப் பக்கங்களில் அழவணம் என்றும், தென் நாடுகளில் மருதெண்ணை என்றும் சொல்லப்படுகிற மருதோன்றி இலையைச் சிறிது பச்சை மஞ்சள் கூட்டி அரைத்து, எலுமிச்சம்பழ அளவு எடுத்து, தேங்காய் எண்ணெய் 6 அவுன்சில் கலக்கி நீர் சுண்ட எரித்து வடித்துக்கொண்டு கோழி இறகால் தடவவும்.

சிலந்திப் புண்ணுக்கு

1. நாயுருவி சமூலங் கொண்டு வந்து இடித்து, சாறு பிழிந்து, ஈயவெள்ளையைச் சிறிது கலந்து தடவிவர ஆறாத புண் ஆறும்.

2. வேலிப் பருத்திச் சாற்றை வெள்ளைத் துணியில் ஊற்றி உடைந்த பெருஞ்சிலந்திகளின் வாயில் வைத்துக் கட்டவும். மூன்றே வேளையில் ஆணி முளை வெளிப் பட்டுக் குணமடைந்துவிடும்.

தீப்பட்ட புண் ஆற

கோவை இலைச் சாறு 2 அவுன்ஸ், எள் எண்ணெய் 2 அவுன்ஸ் தனித்தனியாக வைத்துக்கொண்டு, ஒரு இரும்பு மரக்காலில் முக்கால் மரக்கால் தண்ணிர் விட்டு, எலுமிச்சம்பழ அளவு கிளிஞ்சற் சுண்ணாம்பை அதிற்கலக்கி, ஒரு குச்சியால் வேகமாகத் தண்ணிரைச் சுற்றினால் ஒரு சுழல் ஏற்பட்டு நடுவிற் குழி விழும். அந்தக் குழி மாறுவதற்கு முன்னதாக மிகத் துரிதமாய் அச்சாற்றையும் எண்ணெயையும் தனித்தனியாக இரு கைகளிலிருந்து அந்தக் குழியில் சமமாகவிட, சுழல் நின்று வெண்ணெய் மிதந்து வரும். அதை எடுத்து வைத்துக்கொண்டு, தீப்பட்ட இடத்தில் தடவ, நோய். நீங்கும்; புண்ணும் ஆறும்; தழும்பும் உண்டாகாது. இது ஒரு அதிசய மருந்து.