பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

வைத்துக் கொள்ளுங்கள். மழைக் காலத்திலும் பனிக் காலத்திலும் நெருப்பில் சாம்பிராணி போடுவதுபோலப் போட்டு வீட்டில் புகையடையச் செய்யுங்கள். சுவரிலுள்ள ஈர வாடை, கொசு, கிருமி முதலிய விஷப்பூச்சிகள் ஒழியும். இப்புகையின் வாடை இக்காலத்தில் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் தேவை. இவை எல்லாத் தமிழ் மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கொசு கடிக்காது

வேப்பிலையையும் மஞ்சளையும் வைத்து அரைத்து தண்ணிர் கலந்து இலேசாக உடம்பில் தடவிக் கொண்டு படுத்தால் கொசு கடிக்காது

கொசு வலை இல்லாத போதும், மலேரியாக் கொசுக் கடி உள்ள இடத்தும் இது பெரிதும் பயன்படும்.

எறும்புத் தொல்லைக்கு

உண்ணும் பொருள் வைத்திருக்கும் பாத்திரங்களில் அல்லது பெட்டி அடிப்புறத்தில் சிறிது விளக்கெண்ணெயைத் தடவி வைத்துவிட்டால், அப்பொருள்களை எறும்புகள் அணுகாது. தேன், நெய், பிஸ்கட், சர்க்கரை முதலியவைகளை எறும்புகளிடமிருந்து காப்பாற்ற இது பெரிதும் பயன்படும். 15 நாட்களுக்கு ஒருமுறை தடவினாற் போதும். விளக்கெண்ணெயின் வாடை எறும்புக்குக் கொடியது.

பிள்ளைப் பேற்றுக்குமுன் வாந்தி வந்தால்

ஏலக்காய், பருத்தி விதை, நெற்பொரி வகைக்குக் கால்பலம் சேர்த்து, தேன் விட்டு அரைத்து 9 பங்கு செய்து கொண்டு, காலை மாலை 3 நாட்கள் சாப்பிடக் குணம் ஆகும். பத்தியமில்லை.

த.ம-3