பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

மாதத் தீட்டு வெளிவராவிட்டால்

வேலிப்பருத்தி இலையை இடித்து, இதன் சாற்றில் தேக்கரண்டி அளவு கொடுக்கவும். மூன்றுநாள் காலையில் மட்டும் அருந்துவது போதுமானது. பத்தியம் புளி கூடாது.

பெண் குழந்தைகள் பூப்பு அடைய

உத்தாமணி என்கின்ற வேலிப்பருத்தியின் இலை 7-ம் மிளகு 11-ம் கூட்டி அரைத்து காலைப்பொழுதில் மட்டும் சாப்பிடச் செய்யவும். 5 வேளை மருந்து போதுமானது. புளி, மீன், புகையிலை பத்தியம், பூப்பு அடையாவிட்டால் 15 நாள் கழித்து மறுபடியும் 5 வேளை கொடுக்கவும்.

சூலைக் கட்டுக்கு

பச்சைக் குத்துக் கடலையை வெந்நீர்விட்டு அரைத்து கணுவுக்குக்கணு வலியுள்ள இடத்திலெல்லாம் பத்துப் போடவும். மூன்றே வேளை போதும்.

விக்கலுக்கு

அரிசித் திப்பிலி வராகனிடை 5, சீரகம் வராகனிடை 18 தனித்தனியாக வறுத்துத் துாள் செய்து, சுண்டைக்காய் அளவு எடுத்து தேனிற் குழைத்துக் கொடுக்கவும். ஊற்றின விளக்கெண்ணெயை நெஞ்சில் தடவவும். உடனே குணங்காணும். பத்தியமில்லை.

தலை வலிக்கு

பச்சைக் குத்துக் கடலையை வெந்நீர்விட்டு அரைத்து நெற்றிப் பொட்டுக்களில் தடவ, தலைவலி உடனே நீங்கும். பிள்ளைப்பாலையும் நெற்றியில் தடவலாம்.

அம்மை பூரிக்காமல் உள்ளே காந்திவிட்டால்

இளநீரை மேற்பட்டை சீவி வெந்நீரில் அப்படியே அவித்து எடுத்து, கண் திறந்து, அந்த நீரில் கோரைக் கிழங்கையும், தோற்றான் விதையையும் வகைக்கு 5 வாரசு