பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

னிடை அரைத்துக் கலக்கி, காலைப்பொழுதில் மட்டும் 3 நாள் குடிக்கச் செய்யலாம் அப் பொருள்கள் அகப்படாவிட்டால் அதே நீரில் சீரகம் வராகனிடை 5 மட்டும் கலக்கிக் கொடுக்கலாம். பத்தியமில்லை.

எண்ணெய் தங்கலுக்கு

ஒரு பலம் சீயக்காயைத் தட்டித் தண்ணிரில் ஊறவைத்து, அந்தத் தண்ணிரில் ஒரு சங்கு கொடுக்க, குழந்தைக்கு எண்ணெய் தங்கல் வெளிவந்துவிடும்.

பைத்தியம் தணிய

அகத்திக் கீரையை, அரிசி களைந்த நீரில், உப்பு சீரகம் சேர்த்துக் குழைய வேகவைத்து உண்டும், நீரைப் பருகியும் வந்தால், பைத்தியம் முதலிய மூளைக் கோளாறுகள் நீங்கும்.

பல்வலிக்கு ஒத்தடம்

காட்டாமணக்குச்செடியின் பட்டையைக் கொண்டு வந்து பச்சையாகவே பொடிப் பொடியாய் தறுக்கி அடுப்பில் சட்டியை வைத்து வதக்கி, ஒரு துணியில் பொட்டணம் கட்டி, பொறுக்கும் அளவு சூட்டோடு வலியுள்ள இடத்தில் கன்னத்தின்மீது ஒத்தடம் கொடுக்க வலி உடனே நீங்கும். இருமுறை கொடுக்க வீக்கமும் நீங்கும்.

பல் வலிக்குக் கியாழம்

நன்னாரி வேர்க் கியாழத்தில் காடி கொஞ்சம் கலந்து வாய் கொப்புளிக்க, தீராத பல்வலி தீரும்.

பல்வலிக்கு மருந்து

வேளை வேரும் அருகம்புல்லும் கசக்கித் துணியில் வைத்துப் பல்வலி இடதுபுறமிருந்தால் வலது காதிலும், வலதுபுறமிருந்தால் இடது காதிலும் 3 சொட்டு மட்டும் பிழிய, வலி உடனே நீங்கும்.