பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

பிரளிக்கு

குழந்தைகளுக்கு வயிற்றில் பிரளி நோய் வந்தால், பிரண்டை இலை இரண்டை ஒரு சங்கு விளக்கெண்ணெய்யிற் போட்டு, கரண்டியில் வைத்துச் சிவக்கக் காய்ச்சி, இலையை எடுத்து எறிந்துவிட்டு, எண்ணெயை ஆற்றிக் குழந்தைகளுக்குக் கொடுக்கவும். ஒரே வேளையில் குணம் தெரியும். நோய் நீங்காவிடில், வாரம் ஒரு தடவையாக 3 வாரம் கொடுக்கலாம். தாய்க்குப் பத்திய மில்லை.

அஜீரணத்திற்கு

ஒமத்தைத் தேய்த்து உமியைப் போக்கி அரைத்து பிள்ளைப்பால் அல்லது பசும்பாலிற் கலக்கிக் குடிக்க, அஜீரணம், மாந்தம், வயிற்றுப்போக்கு முதலியன நீங்கும். பெரியவர்களுக்கு 3 தம்பிடி எடை ஓமமும், குழந்தைகளுக்கு தம்பிடி எடை ஓமமும் போதும். பத்தியமில்லை. உணவு அரிசிக் கஞ்சி.

கிராணிக்கு

தும்பைப்பூ, சீரகம், சிறு நெருஞ்சிமுள் இம்மூன்றும் சம எடையாக எடுத்துத் தனியாக வறுத்து, பொன் நிறம் கண்ட பிறகு எடுத்து கல்வத்திலிட்டுப் பொடி செய்து, நாட்டுச் சர்க்கரையிற் கலந்து கொடுத்தால், 6 மாதமாக இருக்கும் கிராணிக் கழிச்சல்கூட உடனே நிற்கும். ஒரு வேளை அளவு 3 விரல்களால் அள்ளும் தூளும், அதே அளவு சர்க்கரையும் 3 நாள் காலை மாலை 6 வேளை மருந்து போதுமானது. புளி, காரம் கூடாது.

பலக் குறைவுக்கு

காற்பலம் சாலாமிசிரியைப் பசும்பாலில் 4 மணி நேரம் ஊறவைத்து சீனாக் கற்கண்டைப் பொடி செய்து போட்டு அப்படியே சாப்பிடவும். பல நாள் தொடர்ந்து