பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

சாப்பிட, பலக்குறைவு நீங்கி, உடலுக்கு வலுவும் இரத்த விருத்தியும் உண்டாகும். 40 நாட்கள் போதுமானது.

இரத்தம் உண்டாக

காலையில் தூங்கி எழுந்ததும், பல்துலக்கிய உடனே, கால் அவுன்ஸ் சுத்தமான தேனும், அரை அவுன்ஸ் நல்ல தண்ணிரும் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக் குடித்துவர உடலில் இரத்தம் வளரும்.

உடல் வலுவுக்கு

நன்றாகப் பழுத்த வில்வப் பழத்தின் விதையை நீக்கி சதையை மட்டும் சீனாக் கற்கண்டில் கலந்து, இலந்தைப் பழ அளவு காலை நேரத்தில் மட்டும் சாப்பிட்டுவர, உடலுக்கு நல்ல வலுவு ஏற்படும். 20 வேளையிலேயே குணம் நன்றாகத் தெரியும். புளி, காரம் குறைக்கவும்.

உள் காங்கைக்கு

வில்வ இலையிற் கொழுந்து இலையாக காலை நேரத்தில் மட்டும் 10 இலைகள் வாயிற்போட்டு மென்று தின்று, பாலைக் குடிக்க, உள் காங்கை நீங்கி உடல் பெருக்கும். சில நாட்களிலேயே பலன் காணலாம்; 40 நாள் மருந்து போதுமானது. காரம், புளி சிறிது குறைப்பது நல்லது.

சோவை நோக்காடுக்கு

பசு மாட்டின் சிறுநீரை துணியில் வடிகட்டி, சூடு ஆறு முன் ஒரு அவுன்ஸ் அளவு காலை நேரத்தில் 7 நாள் மட்டும் குடிக்கக் கொடுத்துவர, சோவை நோக்காடு நீங்கும். 10 நாள் விட்டு மறுபடியும் 7 நாள் கொடுக்கவும். இப்படி 3 தடவைகள் போதுமானது. பத்தியம், மீன், கருவாடு, அகத்திக்கீரை, வாழைத்தண்டு, பாகற்காய், தட்டைப் பயறு, மொச்சை முதலிய வாய்வுப்பொருள்கள்