பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

கண்டிப்பாய் இம் மூன்று மாதமும் கூடாது. எண்ணெய் முழுக்கு மருந்து சாப்பிடும் நாட்களில் மட்டும் கூடாது.

விதர் விக்கத்திற்கு

1. கழற்சிக் கொட்டைகள்ளை உடைத்து அதன் உள்ளிருக்கும் பருப்பில் 5 எடுத்து அரைத்துத் தடவினால் விதர் வீக்கம் மூன்றே நிமிடத்தில் வடியும்

2. புறா மலத்தையும், தேங்காய் திருவிய பூவையும் கலந்து இரும்புக் கடாயிற் போட்டு வறுத்து ஒத்தடம் கொடுக்க உடனே வீக்கம் வடியும்.

3. தேங்காய்ப் பூவில் புறா முட்டையை உடைத்து ஊற்றி வறுத்து ஒத்தடம் கொடுத்தால், 15 நிமிடத்திற்குள் குணத்தைக் காணலாம். -

பிரமித் தைலம்

கஸ்தூரி மஞ்சள், பச்சிலை, பூலாங் கிழங்கு, கார் போக அரிசி, ரோஜா மொட்டு, சண்பகப்பூ மொட்டு, மருக்கொழுந்து செந்தாமரை, வெட்டிவேர், விலாமிச்சைவேர், வெளலா, சந்தனத்தூள், இவை 12-ம் வகைக்கு கால் பலம் வாங்கி, நன்றாக, வெயிலில் உலர்த்தி, ஒன்றாக கலந்து இடித்து, சல்லடையிற் சலித்து, 1 1/2 படி நல்லெண்ணெயிற் கலந்துவிடவும்.

பிரமி இலை, கையாந்துறை பொன்னாங்கண்ணி, கீழாநெல்லி, வல்லாரை ஆகிய ஐந்து மூலிகைகளையும் தண்ணிரில் அலசி எடுத்து, தனித்தனியே இடித்து, வகைக்கு வீசம்படிச்சாறு எடுத்து ஏற்கெனவே கலந்துள்ள எண்ணெய்யில் ஊற்றி நன்றாகக் கலக்கி, அடுப்பில் ஏற்றிச் சிறு அனலில் சொட சொடப்பு அடங்கக் காய்ச்சி எடுத்துப் புட்டியில் வைத்துக் கொள்ள வேண்டியது.