பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எண்ணக் குவியல்
கி. ஆ. பெ. விசுவநாதம்

“In this little books of essays, the learned author uses his pen to instruct his readers on the value of Partiotism and love of the mother tonguể. He advice them in a language and style which are his own to see the true values of things and not be led away by sham appearances. He also takes them into the deepest Significances of words and phrases used by our poets.

—HINDU

நல்ல அடி முதலிய எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பே இச் சிறு நூல். இவ்வெட்டுக் கட்டுரைகளும் தமிழர்கள் பொறாமையகற்றி, வெல்லும் சொல் உணர்ந்து, குறள் வழி நல்லறிவும் இனிமையுணர்வும் பெற்று, மூடநம்பிக்கையையும் மூடப் பழக்க வழக்கங்களையும் ஒருங்கே நீக்கித் தம் நாட்டையும் மொழியையும் 'பிறர்க்கும. காட்டிக் கொடாது தம்மறிவு தம் நாட்ட வர்க்கும் பயன்படுத்துவதால் வாழ்ந்து, வ.உ.சி. சிதம்பரனார் போன்ற உண்மைத் தொண்டுள்ளம் படைத்த தமிழ் மறவராய் வாழவேண்டுமென்பதனை வலியுறுத்தும், நடையில் எளிமையும் கருத்து ஆழமும் காணப்படுகிறது. தமிழ் மக்கள் அனைவரும் படித்துத் திருந்த வழி செய்யும் நல்ல நூல்.

-கலைக்கதிர்
பாரி நிலையம்
184, பிராட்வே, சென்னை-600-108