பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மதிப்புரை

'மருந்து' என்ற சொல்லுக்குப் பண்டைய மருத்துவப் புலவர்களான சித்தர்கள் மிக உயர்ந்த பொருள் கொடுத்திருந்தனர்.

மறுப்பதுடல்நோய் மருந்தென லாகும்
மறுப்ப துளகோய் மருந்தெனல் சாலும்
மறுப்ப திணிநோய் வாரா திருக்க
மறுப்பது சாவை மருந்தென லாமே

எனும் செய்யுள் இதனை வலியுறுத்துகிறது. மக்களின் உணவு செயல்கள் ஒவ்வாமையாலே உடலிலுள்ள வளி, தீ, நீர், (வாத, பித்த, கபம்) ஆகிய மூன்றும் தத்தம் இயற்கையளவில் மிகுந்தும் குறைந்தும் நோய் உண்டான காலத்து, நமது முன்னோர் அந்நோய்களை வெயிலிற் காய்தல், எண்ணெய் முழுக்கு, பட்டினியிருத்தல், உணவு முறைகளில் மாற்றம் செய்தல் போன்ற, இயற்கையானதும் எளிதானதுமான பக்குவங்களால் அவற்றைத் தீர்த்து வந்தனர். இவை போதாதெனில் பச்சிலை,கொடி, வேர், கிழங்கு, பூ, காய், கனி, வித்து முதலானவற்றாலாகிய சாறு, குடிநீர், எண்ணெய், இலேகியம் போன்ற மருந்துகளைக் கொடுத்தனர். இதனாலும் தீர்க்கவியலாத, நோய்களுக்கு, உப்புகள், ரசகந்தக பாடாணங்கள் போன்றவற்றால், நீறு, செந்டதூரம் போன்ற மருந்துகள் செய்தனர். அறுவை, குறுதி (இரத்தம்) வாங்கல் போன்ற பல முறைகளும் இருந்து வந்ததை நூல்களிலிருந்து அறி-