பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4

கிறோம். முன்னர்க் கூறிய செடி கொடிகளை மருந்துகளாய்ப் பயன்படுத்தும் முறைகளை வீட்டிலிருக்கும் பெண்கள், வயதான பாட்டிகள் எல்லோரும் அறிந்திருந்தனர்.இதனை, வீட்டு வைத்தியம்', 'பாட்டி வைத்தியம்' என்றெல்லாம் அழைக்கிறோம். இந்த அருமையான முறையான முறைகளெல்லாம் கையாளாத காரணத்தால், எடுத்துச் சொல்வாரின்மையால், நாள்தோறும் மறைந்து அழிந்து வருகின்றமையாலும், மக்கள் நோய் அனுகா நெறியினைக் கடைப்பிடிக்காததாலுமே, இன்று நாட்டில் நோய்கள் மிகுந்து வருகின்றன. இந்நிலையில் எளிய மருத்துவ முறைகளை எல்லோரும் அறியும்படி செய்ய தமிழ் மருந்துகள்' போன்ற நூல்கள் பல தேவை.

ஆசிரியர் அறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களைத் தமிழ் மக்களுக்கு நான் அறிமுகப்படுத்தத் தேவை இல்லை. அவரைப் போன்ற நாட்டு நலனுக்காக உழைக் கிறவர்கள், பொதுமக்களுக்குப் பயன்படும் தமிழ் சித்த மருத்துவ முறைகளைப் போற்றிக் காக்க முன்வந்துள்ளது நம்மக்களுக்கு நல்ல காலமேயாகும். இச்சிறிய நூலிற் கூறப்பட்டுள்ள முறைகளைக் கையாளுவதில் அதிக முயற்சி தேவை இல்லை. பொருட் செலவோ குறைவு, உட்கொண்டால் என்ன நேருமோவென அஞ் சும்படியான நச்சுப் பொருட்கள் இல்லை, ஆதலின் இதனை ஒவ்வொரு வீட்டாரும் வாங்கிப் பயன்படுத்தி நலமடைவாரென எண்ணுகின்றேன்.

தங்களன்பிற்குரிய,
பண்டித எஸ்.எஸ்.ஆனந்தம்
(அகில இந்திய சித்த வைத்திய சங்கத் தலைவர்)

தியாகராயநகர்

சென்னை

25-04-54